தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை – அரை கட்டு,
தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று,
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல், – கால் கப்,
பச்சை மிளகாய் – 5,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எ
ண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
* இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி… வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்.
* வதக்கிய பொருட்கள் ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் நைசாக அரைக்கவும்.
* மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.
குறிப்பு:
வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.