Home சமையல் குறிப்புகள் வறுத்த கோழி

வறுத்த கோழி

26

வறுத்த-கோழிகோழிக்கறி (எலும்பில்லாமல்) – அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் – கால் கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
நறுக்கிய காரட் – கால் கப்
நறுக்கிய குடைமிளகாய் – கால் கப்
உதிர்த்த காலிஃபிளவர் – கால் கப்
சோள மாவு – ஒரு மேசைக்கரண்டி
வினிகர் – ஒரு மேசைக்கரண்டி
சோயாசாஸ் – 2 தேக்கரண்டி
தேன் – 2 தேக்கரண்டி
எள்ளு – ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கோழிக்கறியினை சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வளையங்களாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து நறுக்கி வைத்துள்ள காய்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் வினிகர், சிக்கன் துண்டுகள் மற்றும் எள்ளுப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
சற்று வெந்ததும் சோயாசாஸ் விட்டு மீண்டும் வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்.
சோளமாவினை நீரில் சற்று கெட்டியாக கரைத்து ஊற்றி வேகவிட்டு இறக்கி, பின் தேனை ஊற்றி சிவப்பு குடைமிளகாய்த் துண்டங்களைத் தூவி பரிமாறவும்.