Home சமையல் குறிப்புகள் வறுத்து அரைத்த மீன் கறி

வறுத்து அரைத்த மீன் கறி

36

தேவையான பொருட்கள் :
download (5)
மீன் – 500 கிராம்
தேங்காய் துருவல் – 3/4 கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 20 பல்
மிளகு – ஒரு தேக்கரண்டி
சுக்கு – சிறிய துண்டு
ஓமம் – ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
தனியாதூள் – ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 3 இனுக்கு
நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை :

• மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

• வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம், 6 பல் பூண்டு, 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல் பிரவுன் நிறமானதும் சுக்கு(லேசாக தட்டிக் கொள்ளவும்) ஓமம் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி பொடி வகைகள் பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

• ஆறியதும் மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்து கொண்டு பின்னர் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

• அரைத்த கலவையில் மீதமுள்ள பூண்டு, கறிவேப்பிலை, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலந்து உப்பு புளி காரத்தின் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.

• மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

• குழம்பு நன்றாக கொதி வந்ததும் 7 நிமிடங்கள் அதிக தீயில் கொதிக்க விட்டு பின் தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும்.

• சுவையான வறுத்தரைத்த மீன் கறி தயார்.