Home பெண்கள் அழகு குறிப்பு வருடத்திற்கு இருமுறை பற்களை கிளீனிங் செய்யுங்க

வருடத்திற்கு இருமுறை பற்களை கிளீனிங் செய்யுங்க

21

ஆண்டிற்கு இரு முறை பற்களை கிளீனிங் செய்துகொள்ளலாம். முறையான கிளீனிங் சிகிச்சை, பற்களுக்கு நல்லது. இதனால் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படாது. பற்களைச் சுத்தம் செய்வதால் பற்சிதைவு, பற்குழி, எனாமல் நீங்குதல் போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.

இதனால் பற்களும் சிறிது வெள்ளையாக மாறும். பற்களில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளையும் கிளீனிங் என்ற முறை குறைக்கும். கிளீனிங் செய்த சில நாட்களுக்கு, காபி, குளிர்ந்த பொருட்களைச் சாப்பிட்டால் பற்கூச்சம் ஏற்படும்.இதனால் பயம் வேண்டாம். நீண்ட நாட்களாகக் காறை படிந்த பற்களில் கிளீனிங் செய்யப்பட்ட பிறகு, பற்களின் மேல் பகுதியில் (Surface) உமிழ்நீர் படும்போது கூச்ச உணர்வு ஏற்படும்.

பழகிய பின் பற்கூச்சம் ஏற்படுவது நின்றுவிடும் இதற்காக சென்சிட்டிவ் டூத் பேஸ்ட்கள் பயன்படுத்த நினைப்போர் பல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். நார்ச்சத்துக்கள் மிகுந்த உணவு நச்சுகளை வெளியேற்றும். முகத்திற்கு எப்படி ஸ்கரப்போ, அதுபோல பற்களை சுத்தப்படுத்தும் ஸ்கரப், நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் மட்டுமே.

பால் பொருட்கள் அனைத்தும் பற்களுக்கு நல்லது. கால்சியம் அடங்கிய கேழ்வரகு, உருளை, பசலைக் கீரை, ஆரஞ்சு, சோயா, முழு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். நிறைய நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால், பற்களில் காறை படுவது தவிர்க்கப்படும். தண்ணீர், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள், நட்ஸ் ஆகியவை பற்களுக்கு நன்மைகளையே செய்யும்.

கரும்பைக் கடித்து சுவைத்து சாப்பிடுதல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்களை இயற்கையாகவே இது சுத்தமாக்கும். சர்க்கரை நோயாளிகள் தங்களின் பாதங்களை எப்படிக் கவனமாகப் பராமரிக்கின்றனரோ, அதுபோல, பற்களையும் முறையாகப் பராமரித்தல் அவசியம். விளம்பரங்களைப் பார்த்து பற்கள் வெள்ளையாக வேண்டும் என சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகும் பேஸ்ட்களைப் பயன்படுத்தக் கூடாது.

அதில் பிளீச்சிங் ஏஜென்ட் (Bleeching agent) கலந்திருப்பதால், சில நாட்களிலே பற்கள் வெள்ளையாகத் தெரிந்தாலும், நாளடைவில் எனாமல் நீங்கி பற்கள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம். அதிகமான நேரம் பல் தேய்ப்பதாலும், அதிகமான பேஸ்ட் பயன்படுத்துவதாலும் பற்கள் வெள்ளை ஆகாது. எனாமல் மட்டுமே நீங்கும். 3-5 நிமிடங்கள் வரை பல் தேய்த்தாலே போதும்.

ஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்ப்பதுடன், அதற்குப் பயன்படுத்தும் பேஸ்ட்டின் அளவு, மிளகு அளவில் இருந்தாலே போதும். பற்களுக்கு எதிரியான புகைப்பழக்கம், சர்க்கரை, கலர் நிறைந்த (பானங்கள்,ஸ்வீட்ஸ், சாக்லெட், சாட் உணவுகள்), கோலா பானங்கள், ஐஸ் வாட்டர், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், வொயின் ஆகியவற்றை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழலில், சாக்லெட்டோ, சர்க்கரை கலந்த உணவையோ சாப்பிட்ட பின், அரை மணி நேரத்திற்குள் பழங்களைச் சாப்பிடும்போது, பற்களில் ஒட்டியிருக்கும் சர்க்கரை படலத்தை பழங்கள் க்ளென்ஸ் (Cleanse) செய்துவிடும். வாய் திறந்துகொண்டே சாப்பிடுதல் கூடாது. உதடுகள் மூடி, பற்கள் அசைந்து, பற்கள் நன்கு வேலை செய்ய வேண்டும்.

அதாவது, உணவை நன்றாக மென்ற பின், விழுங்க வேண்டும். இட்லி முதல் பரோட்டா வரை அனைத்து உணவுகளையும் ஒவ்வொரு முறையும் வாயில் போடும்போது, 20-25 முறை வரை நன்றாக மென்று விழுங்கலாம். நொறுங்கத் தின்றால், சுலபமாக ஜீரணம் ஆகும். ஆரோக்கியமும் மேம்படும். உணவை ரசித்து சாப்பிட்ட திருப்தியும் ஏற்படும்.