என்ன தான் இருந்தாலும் பெண்கள் சில விஷயத்தை ஆண்களிடம் / வருங்கால கணவனிடம் கேட்க தயங்குவார்கள். பெரும்பாலும் பெண்கள் முதல் சந்திப்பிலேயே ஏறத்தாழ அனைத்து விஷயங்களை கேட்டு அனைத்திற்கும் விடை தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுவார்கள். ஆனால், உள்ளுக்குள் இருக்கும் தயக்கத்தின் காரணமாக கேட்காமலேயே இருப்பார்கள்.
தன்னை பெண் பார்க்க அன்று வரும் போது விரும்பி தான் வந்தீர்களா? உற்சாகமாக இருந்தீர்களா என ஆரம்பித்து, திருமணதிற்கு பிறகு தனிக் குடித்தனமா? அல்லது கூட்டுக் குடும்பமா என்பது வரை பெண்கள் கேட்டறிய வேண்டும் என ஒரு பட்டியல் வைத்திருக்கிறீர்கள். ஏறத்தாழ இவர்கள் வைத்திருக்கும் இந்த 13 கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
கேள்வி 1
திருமணத்திற்கு முன்னரே உடலுறவில் ஈடுப்பட்டிருக்கிறீர்களா? அப்படியானால் யாருடன்?
கேள்வி 2
ஒரு நாள் இரவு (ஒன் நைட் ஸ்டேன்ட்) பற்றிய உங்கள் கருத்து என்ன? உடன்பாடு உள்ளவரா?
கேள்வி 3
உடை உடுத்துவதில் இப்படி தான் இருக்க வேண்டும், இல்லை என்ற கருத்து கொண்டிருக்கிறீர்களா? எவ்வாறான உடை தவறு என எண்ணுகிறீர்கள்?
கேள்வி 4
சமைக்க தெரியுமா? எனக்கு உடல்நலம் சரியில்லை அல்லது வெளியூர் சென்றால் சமைப்பீர்களா?
கேள்வி 5
திருமணத்திற்கு பிறகும் நான் வேலைக்கு செல்ல வேண்டும் என விரும்பினால் சம்மதப்பீர்களா? உங்களை விட அதிக ஊதியம் வாங்கினால் தர்ம சங்கடமாக உணர்வீர்களா?
கேள்வி 6
சிங்கிளாகவே எப்படி இருந்தீர்கள், யார் மீதும் ஆர்வம் / காதல் வரவில்லையா?
கேள்வி 7
உங்களுக்கு நெருக்கமான தோழிகள் இருக்கிறார்களா? அவர்கள் யார்? எப்போதிலிருந்து நீங்கள் நண்பர்களாக இருக்கிறீர்கள்?
கேள்வி 8
பயப்படுவீர்களா? எதற்ககெல்லாம் பயம் வரும், எப்போதிருந்து இந்த பயம் இருக்கிறது?
கேள்வி 9
ஒருவேளை முன்னர் காதலித்து தோல்வி அடைந்திருந்தால் / பிரிந்திருந்தால் அவருடன் இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கிறீர்களா?
கேள்வி 10
எங்கள் குடும்பம் / உறவினர்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன? என் குடும்பம், உன் குடும்பம் என்று வேற்றுமைப்படுத்தி பார்ப்பீர்களா?
கேள்வி 11
திருமணத்திற்கு பிறகு நாம் தனியாக வாழ போகிறோமா? அல்லது குடும்பத்துடன் ஒன்றாக இருக்க போகிறோமா?
கேள்வி 12
புகை, மது போன்ற அல்லது வேறுவிதமான ஏதேனும் அடிக்ஷன் உங்களுக்கு இருக்கிறதா?
கேள்வி 13
என்னை முதல் முறையாக பார்க்க வரும் போது ஏதேனும் உற்சாகம் ஏதேனும் இருந்ததா? அல்லது வெறுமென சும்மா பார்க்க வந்தீர்களா?