சிரிப்பு மனிதர்களுக்கு அற்புதமான மருந்தாக செயல்புரிகிறது. ஒருவர் வாய்விட்டு சிரித்தால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை. சிரிப்பு மூலம் உடல் உறுப்புகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கான பல்வேறு என்ஸைம்களும், ஹார்மோன்களும் சிரிப்பின் மூலம் உற்பத்தியாகிறது. சிரிக்கும் பொழுது மூளையில் அதிகமாக எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கிறது. இது சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். சிரிக்கும் பொழுது வலியைக் குறைக்கும் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இதயத் துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் இருக்கையில் சிரிப்பு மூலம் செக்ஸ் வாழ்க்கை உற்சாகமடையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். படுக்கை அறையில் உற்சாகமுடன் செயல்பட கிளர்ச்சி அவசியம். செக்ஸ் பற்றிய எண்ணங்கள், அதைப்பற்றிய உணர்வுகள் இருந்தால் மட்டுமே உற்சாகமாக செயல்பட முடியும். வேலைப்பளு, மனஅழுத்தம், உற்சாகமின்மை போன்ற காரணங்களினால் தாம்பத்திய உறவில் சிலருக்கு ஈடுபாடு குறையும். சிலருக்கு சோர்வினாலும் உறவில் ஈடுபட முடியாது. இந்த சிக்கல்களுக்கு சிரிப்பு மருந்தாக திகழ்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாய்விட்டு சிரிங்க தம்பதியர் இருவரும் சோர்வாக உணர்ந்தால் நகைச்சுவையாக பேசுங்கள். எதைப்பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். நகைச்சுவையோடு கொஞ்சம் கிளர்ச்சியூட்டும் பேச்சாகவும் இருக்கலாம். சத்தம் போட்டு சிரிங்க ( பக்கத்து வீட்டுக்கு கேட்டுட்டா?) அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் உங்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் இறுக்கத்தை தவிருங்கள் படுக்கை அறைக்குள் நுழைந்த உடனே அவசரம் அவசரமாக செயல்பட வேண்டும் என்று அவசியமில்லை. இதனால் உறவானது தொடங்கிய வேகத்தில் முடிந்துவிடும். எனவே முதலில் மெதுவாய் முன்விளையாட்டுக்களில் தொடங்குவது இறுக்கத்தைப் போக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மென்மையான ஸ்பரிசம், மனதிற்கு இதமான பாடல் என உறவை தொடங்குவது உற்சாகத்தை அதிகரிக்குமாம். கூடுதல் நெருக்கம் சில தம்பதியர் தங்களின் துணையை ஏதோ கடமைக்காக கையாளுவார்கள். ஏதோ இன்றைக்கு வேலை முடிந்தது என்பதோடு உறவும் இருக்கும். அது சில நாட்களில் ஒருவித வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே நெருக்கத்தை அதிகரியுங்கள். உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை சின்னச் சின்னதாய் முத்தத்தினால் கிளர்ச்சியூட்டுங்கள். இதனால் உங்கள் இருவருக்கும் இடையேயான நேசமும், நெருக்கமும் அதிகரிக்கும். மனம் விட்டுப் பேசுங்க கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இருவரில் ஒருவருக்கு ஏதாவது சிக்கல் என்றாலும் மனம் விட்டு பேசி அதை தீர்க்க முயலுங்கள். அதை விடுத்து மனதிற்குள்ளேயே வைத்து பூட்டிக்கொள்வதுதான் மனஅழுத்தத்தை அதிகரிக்கும், உறவிலும் விரிசலை ஏற்படுத்திவிடும். எனவே படுக்கையறை சிக்கலை மனம் விட்டு பேசுவதன் மூலம் தீர்த்துக்கொண்டு உற்சாகமான உறவில் ஈடுபடமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.