Home சமையல் குறிப்புகள் ரிச் வெஜ் பிரியாணி

ரிச் வெஜ் பிரியாணி

25

vej 11தினமும் ஒரு காய்கறி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் சிலர் அதிகமாக காய்கறிகளை சாப்பிடுவதில்லை. அவர்கள் கட்டாயம் வாரம் ஒரு முறை எல்லா காய்கறிகளையும் போட்டு பிரியாணி செய்து சாப்பிடுவது நல்லது.உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
வெங்காயம்- 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
கேரட்,பீன்ஸ்,கோஸ்,ப.பட்டாணி,உருளைகிழங்கு, சோயா பால்ஸ்,பட்டர் பீன்ஸ் – தலா 50 கிராம்.
ப.மிளகாய் – 5
கொத்தமல்லி, புதினா- 1 கட்டு
எலுமிச்சை – 1
மிளகாய்த்தூள் – தேவைக்கு
மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
நெய் – 50கிராம்
எண்ணெய் – 150 கிராம்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
ஷாஜீரா,
பிரிஞ்சி இலை,
ஜாதிபத்ரி
இஞ்சி,பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
தயிர் – 1/2 கப்
தயார் செய்யும் முறை:
முதலில் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு வதக்கவும்.
பிறகு அதில் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
இதில் மிளகாய்த்தூள், தனியா, மஞ்சள்த்தூள், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் தேவைக்கு உப்பு போட்டு குக்கரை மூடி போட்டு வேக வைக்கவும்.
ரைஸ் குக்கரில் அரிசிக்கு சமமாக தண்ணீர் ஊற்றி அதில் சிறிது ஷாஜீரா,கொ.மல்லி,புதினா,ப.மிளாகாய்,ஏலக்காய்,கிராம்பு உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
கொதி வந்த பின்பு அரிசியினை போடவும்.
காய்கறி கலவை ரெடி ஆனபின்பு ரைஸ் குக்கரில் கலந்து அதன் மேல் வறுத்த முந்திரி எலுமிச்சை சாறு ஊற்றி.கீப் வாமில் வைக்கவும்.
10 நிமிடம் கழித்து சூடாக பரிமாறவும்