Home ஜல்சா யாழில் பெண்கள் செய்யும் காதல் திருவிளையாடல்கள்!

யாழில் பெண்கள் செய்யும் காதல் திருவிளையாடல்கள்!

31

பாமரராகிய பெற்றோர்கள் தங்களைப் போன்று பிள்ளைகள் கல்வியின்றி கஷ்டப்படக் கூடாது என்பதற்காகப் பட்டணம் அனுப்பிக் கல்வி கற்பித்தால், அங்கு காதலில் மூழ்கி அந்தக் காதலுக்காகப் பெற்றோர்களை ஏமாற்றி வித்தை காட்டுகின்றனர் யாழ்ப்பாணப் பெண்கள்.

காதல் என்ற சொல்லுக்குத் தற்போதைய காதலர்கள் அர்த்தம் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக் காலத்தில் காதல் ஒரு தெய்வீகமானது எனப் போற்றப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கு அர்த்தமே தெரியாதவர்கள் காதல் வசப்பட்டு, கலாசாரத்தைக் காலாவதியாக்குகின்றனர்.

இதை விட, இந்தக் காதல் பெற்றோர்களையும் ஏமாற்றி, அவர்களைப் பித்துபிடித்து அலைய வைக்கின்றது எமது குடாநாட்டில்.

இவ்வாறொரு சம்பவம் ஒன்று யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றதனைக் கொண்டே இச் செய்தி எழுதப்பட்டுள்ளது. அதாவது, தங்களது மகள் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து ஒரு ஆணையும் தேடிக் கண்டுபிடித்து விட்டனர்.

ஆனால் கல்வி கற்கும் இடத்தில் கற்பித்த ஆசிரியருடன் காதல் வசப்பட்ட மேற்படி பெண், பெற்றோர் செய்து வைக்கவுள்ள திருமணத்தை நிறுத்துவதற்காக அந்த ஆசிரியருடன் சேர்ந்து தனது பெற்றோரை ஏமாற்றி இத் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

அதாவது, தொழில்நுட்பக் கல்லூரியில் முதல் இடத்தில் உங்கள் மகள் சித்தியடைந்துள்ளதாகவும், அவர் மேல்படிப்பைத் தொடர வேண்டும் எனில் திருமணம் செய்யக் கூடாது. அது எமது கல்லூரியின் சட்டத்திற்கு முரணானது என அந்த காதலனான ஆசிரியரால் இப் பெண்ணின் பெற்றோருக்கு தொலைபேசியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பிய இந்தப் பாமரப் பெற்றோர் ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்து, ஆலயத்திற்கும் கூழ் காய்ச்சி தங்கள் ஆனந்தத்துடன் ஆண்டவனின் ஆசியையும் பெற்றுள்ளனர். அத்துடன், தங்களால் காய்ச்சிய கூழை அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்டு மகிழ்ந்துள்ளனர். தனது மகள் முதலிடத்தில் சித்தியடைந்ததையிட்டுப் பெருமையடைந்த பெற்றோருக்கு இது அனைத்தும் காதல் எனும் காமலீலையால் தங்களது மகள் நடத்திய திருவிளையாடல் என்பதை அவர்கள் அறியவில்லை.

பாவம்! என்ன செய்வது? பெற்றவர்களுக்குப் பிள்ளைகளே எதிரியாகும் போது மற்றவர்களை நாம் எவ்வாறு எளிதில் நம்பிவிட முடியும்? அதேநேரம் தங்களால் செய்யப்படவிருந்த திருமணத்தையும் இரத்துச் செய்துள்ளனர்.

என்ன செய்வது? தாங்கள் கல்வி கற்காததால் எங்கள் பிள்ளைகளாவது அதனைக் கற்றுக் கொள்ளட்டும் என வெளியிடங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தால், அங்கு கல்வியை விட காதலைத்தான் கற்றுக் கொள்கின்றனர் இவர்கள்.

இது இவ்வாறிருக்க தற்போது அந்த ஆசிரியருடனான காதலும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை எல்லாம் யாரிடம் போய் முறையிடலாம். பிள்ளையாரின் தம்பி முருகப் பெருமானிடம்தான் முறையிட வேண்டும். ஏனெனில் அவருக்குத்தான் இதில் அனுபவம் அதிகம் அல்லவா?

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க கூலிக்கு வேலை செய்து பிள்ளைகள் ஒளி பெற மெழுகுவர்த்தியாக உருக்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு, யாழ்ப்பாணப் பெண்கள் செய்யும் நன்றிக் கடன் இதுதானோ?

இதைவிட ஆசான் என்பவர்கள் ஆண்டவனுக்கு நிகராகப் போற்றப்படுபவர்கள், பூசிக்கப்படுகிறவர்கள். ஆனால் அந்த ஆசான் குலத்துக்கே இழிவை ஏற்படுத்தும் இவ்வாறானவர்கள் இனங்காணப்பட்டு அந்த புனிதத் தொழிலில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதுவே எதிர்கால இளம் சந்ததியினரின் கல்வி ஒளிமயமாகுவதற்கு வழி ஏற்படுத்தும்.

இது இவ்வாறிருக்க, சொந்த இடத்தில் காவாலிகளாக இனங்காணப்படாதவர்கள், பட்டணம் வந்து தங்கள் காவாலித்தனத்தை அரங்கேற்றுகின்றனர். ஆனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர் என எண்ணி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கின்றனர். இதுதான் இன்றைய யாழ்ப்பாணம்.