Home பெண்கள் அழகு குறிப்பு மூக்கின் மேலுள்ள கருமையை போக்கும் வழிகள்

மூக்கின் மேலுள்ள கருமையை போக்கும் வழிகள்

61

தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான். இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

• தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்..

• உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும். இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

• எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

• கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.