Home சூடான செய்திகள் முறைகேடான பாலியல் உறவுகள், முஸ்லிம் சமூகத்தில் மிகவும் குறைவு. ஆய்வில் தகவல்!

முறைகேடான பாலியல் உறவுகள், முஸ்லிம் சமூகத்தில் மிகவும் குறைவு. ஆய்வில் தகவல்!

22

download (1)குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அனைத்து மதங்களும் திருமண உறவிற்கு வெளியே உள்ள முறைகேடான பாலியல் உறவுகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றுபோல் இல்லை என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆமி ஆடம்ஸிக் சுட்டிக்காட்டுகிறார்.

முஸ்லிம் நாடுகளில் எய்ட்ஸ் நோய் மிகக் குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கூடுவதையொட்டி சமூகத்தில் திருமணத்திற்கு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகளும் குறைந்து வருகின்றன. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள் யூதர்களில் 94 சதவீதமாகும். கிறிஸ்தவர்களில் 79 சதவீதம் காணப்படுகிறது. புத்தர்களில் 65 சதவீதம். ஹிந்துக்களில் 13 சதவீதம் காணப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் முறைகேடான பாலியல் உறவுகள் யூதர்களிடம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்களிடம் 3 சதவீதமும், ஹிந்து, பெளத்த, முஸ்லிம்களிடம் ஒரு சதவீதமாகவும் உள்ளது.

இந்த ஆய்வுக் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் கத்தோலிக் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சோசியாலஜிஸ்ட் ரெவ.பால் சுல்லின்ஸ் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவுகள் ஆச்சரியமானதல்ல. ஏனெனில் இவை பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. புர்கா(உடலை மறைக்கும் ஆடை) உண்மையிலேயே இவ்விஷயத்தில் நன்றாக வேலை செய்கிறது. ஆண்களிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி உடல் முழுவதும் மறைத்தால் பெண்களை அவர்களது திருமணம் முடியும் வரை முந்தைய முறைகேடான பாலியல் உறவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகிறார்.

சூசி இஸ்மாயில், இவர் திருமணம் மற்றும் விவகாரத்துக்கான மனவளவாளர்(கவுன்சலர்) ஆவார். இவர் கூறுகையில், “திருமணத்திற்கு முந்தையை, பிந்தைய முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம்களிடம் குறைவாக இருப்பதற்கு அவர்களது மார்க்க ரீதியான வேர் காரணமாகும். இஸ்லாம் விபச்சாரத்தை தடைச் செய்கிறது. இளம் வயதில் இருந்தே முஸ்லிம்கள் பாலியல் ஒழுக்கம் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என தெரிவித்துள்ளார்.