முருங்கைக்கீரை – 4 கப்
கேரட் துருவல் – ஒரு கப்
தேங்காய் துருவல் – அரை கப்
மிளகாய்பொடி – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
முருங்கைக்கீரையை ஆய்ந்து, அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலுடன் மிளகாய் பொடி மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக நீர் சேர்க்காமல் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
கீரை பாதியளவு வதங்கியதும் உப்பு மற்றும் கேரட் துருவலை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் இரண்டும் சேர்ந்து நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை சேர்த்து வதக்கவும்.
தேங்காய் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி பச்சை வாசனை அடங்கியதும் இறக்கி விடவும்.
சுவையான எளிதாக செய்யக் கூடிய முருங்கைக்கீரை கேரட் துவரன் ரெடி.