Home பெண்கள் அழகு குறிப்பு முதுகையும் கொஞ்சம் கவனிங்க!

முதுகையும் கொஞ்சம் கவனிங்க!

17

முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலோனோர் முதுகுப் பகுதிக்கு கொடுக்க மறுத்துவிடுகின்றனர். அதனால் முதுகுப்பகுதியில் பருக்களும், சின்னச்சின்ன கட்டிகளும் ஏற்படுகின்றன. மேலும் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள் தங்களின் முதுகுப்பகுதியும், முதுகெலும்பும் பாதிக்கப்படுவதை உணர்வதில்லை. பின்னர் முதுகுவலியால் நிமிரக்கூட முடியாத அளவிற்கு அவதிக்குள்ளாகின்றனர். முதுகினை பாதுகாக்க நிபுணர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றுங்களேன்.

இன்றைக்கு கணினி இன்றி வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. பெரும்பாலோனோர் கணினி முன்பு அமர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். கணினியில் மணிக்கணக்காக அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு கண்டிப்பாக முதுகு பாதிக்கப்படும். எனவே உங்கள் கணினி உங்கள் உயரத்திற்கு சரியாக அமைவது மிக முக்கியம். நீங்கள் உட்கார்ந்து பணி புரியப் போகும் நாற்காலி சரியான உயரமும், நல்ல வசதியுடையதாகஉள்ளதா என்று சரிபார்த்து அமர்வது உங்களின் முதுகுக்கு பாதுகாப்பினை தரும்.

மிக நீண்ட நேரம் தொடர்ந்து கணினி முன் அமர்வதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து தண்ணீர் குடிக்க இடம் பெயருங்கள். எழுந்து நடப்பதால் உங்கள் ரத்த ஓட்டம் புதுப்பிக்கப்படும். இது உங்கள் முதுகெலும்புகளை அழுத்தில் இருந்து சிறிது நேரம் மீட்டு எடுக்கும்.

உங்கள் முதுகெலும்பு முடிந்த வரை நேர்கோட்டில் செங்குத்தாக இருப்பது நலம், ஆனால் இதனை நம்மால் செய்ய முடியாது, இதற்காகத்தான் நாற்காலிகள் இதனை கருத்தில் கொண்டு நவீன வடிமைப்புடன் வருகின்றன. அதற்காகப்பிரத்தியோகமாக வடிமைத்த நாற்காலிகள் வாங்கி பயன்படுத்துங்கள்! முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்!! முதுகுப் பகுதியை சிறிது வலப்புறம், இடப்புறம் திருப்பி வளைத்து சிறிய உடற்பயற்சி செய்து விட்டு மீண்டும் அமரலாம். நாற்காலியில் உங்கள் முதுகைத் தாங்கும் பகுதி சரியான உயரத்துடனும், மிருதுவாகும் இருக்க வேண்டும். உங்கள் கால் பாதம் எப்பொழுதும் தரையை தொடும் படியான உயரம் உள்ள நாற்காலிகளை உபயோகிப்பது மிக நல்லது.

படுத்து கொண்டு மிக நீண்ட நேரம் facebook, orkut, blogging, வலம் வருவதை முற்றிலும் தவிருங்கள். கம்யூட்டரை வேலைப் பளுவால் உற்று நோக்க ஆரம்பித்து விடுகிறோம் மிக விரைவாக இதனை தவிருங்கள், முடிந்த வரை உங்கள் கண்களை 45 நிமிடங்களுக்கு ஒரு முறை இடது வலது புறம் திரும்பி பார்வைக் கோட்டை அகலப்படுத்தி விட்டு மீண்டும் கணினியை பார்க்கலாம்.