ஒரு சிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால் முதுகு மென்மையாகும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். இதனால் முதுகில் கரும்புள்ளிகள், பரு தோன்றும்.
முதுகை அழகாக்கி பருவை போக்க இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முதுகை நன்றாக தேய்த்து கழுவவும். எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும்.
வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு பொலிவு தரும்.
இவை தவிர கூன் போடாமல் நிமிர்ந்து நடப்பதும் முதுகு சுருக்கமின்றி அழகாக தெரியும். அப்புறம் என்ன ஜன்னல் வைத்த மற்றும் படிக்கட்டு வைத்த ஜாக்கெட் தைத்து போட்டு முதுகு அழகை அதிகரிக்கச் செய்யலாம்.