சென்னை: நடிகை எமி ஜாக்ஸன் மீண்டும் அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது ‘2.0’ படக்குழுவினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகை எமி ஜாக்சன் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ஷுட்டிங் பிரேக் விடும்போதெல்லாம் லண்டனுக்கு பறந்து சென்று விடுகிறார் எமி. அங்கு செல்லும்போது அரை நிர்வாணப் படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த முறை இதுபோன்று அரை நிர்வாணப் படத்தை எமி வெளியிட்டபோது அது ‘2.0’ படக்குழுவினரை அதிர வைத்தது. இதையடுத்து எமி ஜாக்ஸனுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்தார் ஷங்கர்.
இந்தப் பரபரப்பு அடங்கும் முன்னரே, முன்பு போல மீண்டும் ஒரு அரை நிர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். தற்போது வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படத்துக்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:
டாப் போட சோம்பேறித்தனமான நாள் ஞாயிற்றுக்கிழமை என்று தெரிவித்துள்ளார் எமி ஜாக்ஸன்.
இந்தப் படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் மீண்டும் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது ‘2.0’ படக்குழு.