Home பாலியல் மார்பகங்களின் மறுபக்கம் – தெரியாத அந்தரங்க உண்மைகள்..!

மார்பகங்களின் மறுபக்கம் – தெரியாத அந்தரங்க உண்மைகள்..!

46

பெண்கள் குறித்த ஆண்களின் கற்பனைகள், பார்வைகள், ஈர்ப்புகள் பொதுவாகவே அபரிமிதமாக இருக்கும். அதிலும் பெண்களின் மார்பகங்கள் குறித்த கற்பனைகள் குறித்துச் சொல்லவே வேண்டாம். பெண்களின் உடலிலேயே மிகவும் அழகான ஒரு விஷயம் எதுவென்றால் அது மார்பகங்கள்தான். அதை செக்ஸியான ஒரு விஷயமாக மட்டுமே பார்ப்பது பலரின் வழக்கமாக இருந்தாலும் கூட பெண்மைக்கும், பெண்களுக்கும் அழகு சேர்ப்பது அவர்களின் மார்பகங்கள்தான்.

பெண்களின் மார்பகங்கள் குறித்த பல விஷயங்கள் நிறைய பேருக்கு, குறிப்பாக பெண்களுக்கே கூட அதிகம் தெரிவதில்லை. அதுகுறித்த ஒரு தொகுப்பு இது…

பெண்களின் மார்பகங்களில் வலது மார்பகத்தை விட இடது மார்பகம் சற்றே பெரிதாக இருக்கும். இதை உடனடியாக பார்க்கும்போது தெரியாது. ஆனால் இரண்டு மார்பகங்களுமே ஒரே அளவில் இருக்காது. வலதை விட இடது சற்று பெரிதாக இருக்கும். அதேபோல மார்பக காம்புகளும் கூட அளவில் வேறுபடும்.

மார்புகளிலும் கூட பருக்கள் தோன்றும். முகத்தில் வருவதைப் போல கருமை படியும். இதை பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஒரு மார்பகத்தின் எடையானது சராசரியாக 0.5 கிலோவாக இருக்குமாம். உடலில் உள்ள கொழுப்புச் சத்தில் 4 முதல் 5 சதவீதம் வரை மார்பகத்தில்தான் இருக்கிறதாம். பெண்களுக்கு வயதாக ஆக மார்பகங்களிலும் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறதாம்.

புகை பிடிக்கும் பழக்கம் மார்பகத்தின் அழகையும், பொலிவையும் கெடுக்குமாம். புகை பிடிக்காத பெண்களை விட புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ச்சி அடையும் என்கிறார்கள் டாக்டர்கள்.

இயற்கையான மார்பகம் பொலிவாக அமையாத பெண்கள், செயற்கை மார்பகத்தை நாடுகிறார்கள். உலகில் கிட்டத்தட்ட 20 லட்சம் பெண்களுக்கும் மேல் செயற்கையான மார்பகத்துடன்தான் வலம் வருகின்றனராம். பமீலா ஆன்டர்சன், கேத்தி பிரைஸ் ஆகியோர் இதற்கு ஒரு உதாரணம். மார்பகங்கள் அழகாக, நேர்த்தியாக, எடுப்பாக இருந்தால்தான் அழகு என்று பெண்கள் நினைப்பதே இதற்குக் காரணம். மார்பகங்களின் அழகைக் காப்பாற்றுகிறோம் என்று கூறி பெற்ற குழந்தைக்குப் பால் கொடுப்பதைக் கூட பெரும்பாலான பெண்கள் சுமையாக கருதுகின்றனராம்.

சராசரியாக 35 வயதில்தான் பெண்களுக்கு மார்பகம் குறித்த விழிப்புணர்வு அதிகம் இருக்கிறதாம். இந்த வயதுப் பெண்கள்தான் செயற்கை மார்பகம், மார்பக மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட விஷயங்களில் தீவிரம் காட்டுகிறார்களாம்.

ஆண்களுக்கு எப்படி உணர்ச்சிவசப்படும்போது ஆண்குறி நீள்கிறதோ, அதேபோலத்தான் பெண்களுக்கும், உறவின்போதும், உரசல்களின்போதும், ஆணின் ஸ்பரிசம் படும்போதும் மார்பகங்கள் விரிவடைகிறதாம். அதேபோல மார்பக காம்புகளும் கூட அப்போது நீட்சி அடையுமாம்.

வாக்கிங், ஜாகிங், குதித்தல், ஏரோபிக்ஸ் போன்றவற்றின்போது மார்புகள் குலுங்குவது சகஜம்தான். ஆனால் அதிக அளவில் மார்புகள் அடிக்கடி குலுங்குவது நல்லதில்லையாம். இதனால் சரியான, பொருத்தமான பிரா அணிவது அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். இல்லாவிட்டால் மார்பகங்களில் வலி ஏற்படுவதும், அவை சீக்கிரமே தொய்வடையவும் வாய்ப்பு ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களில் நகக் கீரலால் உட்காயம் ஏற்படும்போது மார்பக நரம்புகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாம்.

தூங்கும்போது மார்பகங்கள் சரியான முறையில் சரிந்திருக்காவிட்டாலும் பிரச்சினைதான். தொடர்ந்து சரியான பொசிஷினில் பெண்கள் தூங்காவிட்டால் மார்பகங்கள் விரைவில் அளவு மாறி விடும் என்கிறார்கள். பெண்கள் படுத்துத் தூங்கும்போது சரியான பொசிஷனில் படுப்பது அவசியம், மேலும் தங்களது மார்பகங்கள் அதிக அழுத்தத்திற்குள்ளாகமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்வது அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள்.

உறவின்போது மார்பகங்களை அதிக அளவில் பாடுபடுத்துவதை ஆண்கள் பொதுவாக தவிர்க்க வேண்டும் என்பதும் டாக்டர்களின் ஒரு முக்கிய அறிவுரை. இதனால் மார்பகங்களில் காயம் ஏற்படலாம், பெண்களுக்கு வலி ஏற்படலாம். மார்பகங்களை முரட்டுத்தனமாக கையாள்வதால் அவை சீக்கிரமே தளர்ச்சி அடைந்து விடும். எனவே அதை மென்மையாக கையாள்வதே நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.

செக்ஸியான பொருள் அல்ல மார்பகங்கள் என்பதை பெண்களை விட ஆண்கள்தான் முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவை அழகுப் பொருளோ அல்லது வேடிக்கைப் பொருளோ அல்ல. மாறாக, ஒரு பெண்ணுக்கு அவளது தாய்மையையும், பெண்மையின் கர்வத்தையும் உணர்த்தும் அற்புதம் மார்பகங்கள். எனவே அதை சரியான முறையில் பராமரிப்பதும், பாதுகாத்துக் கொள்வதும் முக்கியமான ஒன்று.