Home பாலியல் மாத விடாய் நிறுத்தம் 3 நிலைகள்

மாத விடாய் நிறுத்தம் 3 நிலைகள்

17

இதயற்கையான `மாத விடாய் நிறுத்தம்’ 3 நிலைகளில் நிகழும். அவை

முதல்நிலை :

இது மாத விடாய் நிறுத்தம் ஏற்பட பொதுவில் சுமார் ஒரு வருட காலம் முன்பு ஆரம்பிக்கும். சிலருக்கு 2-6 வருடங்கள் கூட இருக்கலாம். திடீர் என மாத விலக்கு ஓரிரு மாதங்கள் இராது. பிறகு திடீர் என ஏற்படும்.

இதன் அறிகுறியே நாம் மாத விடாய் நிறுத்தத்தினை நெருங்குகிறோம் என்பதுதான். ஆனால் இது முழுமையான நிறுத்தம் இல்லை என்பதனை உணர வேண்டும். இக்காலத்தில் கருத்தரித்தல் கூட நிகழலாம்.

இவ்வாறு விட்டு விட்டு மாத விலக்கு ஏற்படுவதன் காரணம் சினைப் பையில் உருவாகும் ஈஸ்டிரஜன், ப்ரோஜெட்டிரான் என் பெண் என ஹார்மோன்கள் சுரப்பது மிகவும் குறைந்து விடுவதுதான்.

இதனால் திடீரென்ன படபடப்பு, முகம் சிவத்தல் போன்றவை தோன்றலாம். சில இது போன்ற பாதிப்புகள் மாத விடாய் நிறுத்தம் ஏற்பட்டும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் தொடர்ந்து இருக்கலாம்.

இரண்டாம் நிலை :

தொடர்ந்து ஒரு வருடம் மாத விலக்கு ஏற்படவில்லை என்றால் `மாத விடாய் நிறுத்தம்’ ஏற்பட்டு விட்டது எனலாம்.

மூன்றாம் நிலை :

மாத விடாய் நிறுத்தத்திற்கு பிறகு இருக்கும் காலம் ஈஸ்டிரஜன் ஹார்மோன் குறைவதால் சில உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம். படபடப்பு, அதிக வியர்வை போன்றவை தொடரலாம்.

சில முக்கிய ஆலோசனைகள் :

* மசாலா உணவு, காபி, மன உளைச்சல் படபடப்பு போன்றவை உஷ்ண பாதிப்பினை தரலாம். எனவே இவற்றினை தவிர்க்கவும்.

* பருத்தி ஆடைகளை அணியவும்.

* எடை அதிகமாக இருப்பவர்கள் எடை குறைப்பு செய்யவும்

* பிறப்புறுப்பில் அதிக வறட்சி இருந்தால் அதற்கான `க்ரிமினை’ மருத்துவ ஆலோசனையுடன் உபயோகிக்கவும்.

* தூக்கமின்மை ஏற்படலாம். இவர்கள் உடற்பயிற்சி. எப்பொழுதும் சுறுசுறுப்பாய் பகலில் இருத்தல் போன்ற எளிய பயிற்சி முறைகளை கையாளவும்.

* மன உளைச்சல் இன்றி இருக்க உங்களை நீங்களே சந்தோஷமான சூழலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* சிலருக்கு அதிக மறதி ஏற்படலாம். உங்களது ஒத்துழைப்பும், மருத்துவ ஆலோசனையும் அவசியம்.

* கால்ஷியம், வைட்டமின் டி போன்றவை தேவையான அளவு பெற மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

* யோகா பயிற்சி, தியானம் மிகவும் சிறந்தது.