Home ஆரோக்கியம் Tamil X Care மாதவிலக்கின் போது உண்டாகும் ரத்தப்போக்கின் நிறங்கள் எதை குறிக்கிறது?..

Tamil X Care மாதவிலக்கின் போது உண்டாகும் ரத்தப்போக்கின் நிறங்கள் எதை குறிக்கிறது?..

43

பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் ரத்தப்போக்கின் நிறம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அப்படி வெளிப்படும் ரத்தப்போக்கின் நிறத்தை வைத்தே பல்வேறு நோய்களுக்கான அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளலாம்.

மாதவிலக்கின் போது வெளிப்படும் ரத்தப்போக்கு அடர் பழுப்பு நிறத்தில் வெளிப்பட்டால், அது நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்ட பழைய ரத்தம் என்று பொருள்.

நல்ல சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்பட்டால், அது கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறும் புதிய ரத்தம்.

இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறத்தில் உதிரம் வெளிப்பட்டால், அது மாதவிடாய் சுழற்சி ஆரோக்கியமாக உள்ளது என்பதை குறிக்கிறது. இந்த வகை நிறமுள்ள ரத்தம் பொதுவாக மாதவிலக்கு தொடங்கிய 2 வது நாளில் வெளியாகும்.

கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் வெளிப்படும் ரத்தப்போக்கு, மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அது கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றுகளை குறிக்கிறது.

கருப்பையின் வாயிலிருந்து திரவங்கள் வெளியேறி உதிரத்துடன் கலந்து வெளியேறும் போது, ஆரஞ்சு நிறத்தில் உதிரப்போக்கு வெளிப்படும். இந்த நிறமுள்ள உதிரப்போக்கு, கருப்பைத் தொற்று உள்ளது என்பதை குறிக்கிறது.