இளம் வயதில் ஆண்கள் சுய இன்பம் காணும் எண்ணிக்கை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறித்து ஓர் மாபெரும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, கடந்த 1992-ம் ஆண்டு துவங்கி 2010-ம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 32,000 ஆண்களை பின்தொடர்ந்து. இளம் வயதில் (இருபதுகளில்) அவர்கள் மாதத்திற்கு எவ்வளவு முறை சுய இன்பம் காண்கின்றனர் என கணக்கெடுத்து, அதன் மூலம் அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் எவ்வளவு சதவீதம் இருக்கிறது என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவில், 8-ல் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
நன்மையா, தீமையா? பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுதலும், சீரான முறையில் சுய இன்பம் காணுதலும் நல்லது தான் என ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் தெரவித்துள்ளனர். ஆயினும், மாதம் எத்தனை முறை சுய இன்பம் காணுகின்றனர் எனும் எண்ணிக்கை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறித்தும் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.
3 முறை ஆய்வில் கலந்துக் கொண்ட ஆண்களில், மாதத்திற்கு 3 முறை சுய இன்பம் காணும் நபர்கள் மத்தியில் 192 பேருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. (குறிப்பு: இளம் வயதில் [இருபது வயதுகளில்])
7 முறை ஆய்வில் கலந்துக் கொண்ட ஆண்களில், மாதத்திற்கு 7 முறை சுய இன்பம் காணும் நபர்கள் மத்தியில் 1,041 பேருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
8 – 12 முறை ஆய்வில் கலந்துக் கொண்ட ஆண்களில், மாதத்திற்கு 8 – 12 முறை சுய இன்பம் காணும் நபர்கள் மத்தியில் 1,509 பேருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
20 முறை ஆய்வில் கலந்துக் கொண்ட ஆண்களில், மாதத்திற்கு 20 முறை சுய இன்பம் காணும் நபர்கள் மத்தியில் 807 பேருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
20+ முறை ஆய்வில் கலந்துக் கொண்ட ஆண்களில், மாதத்திற்கு 20+ முறை சுய இன்பம் காணும் நபர்கள் மத்தியில் 290 பேருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆய்வாளர் ஜென்னிபர் இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர் ஜெனிப்பர், “இளம் வயதில் பாதுகாப்பான உறவிலும், சீரான முறையில் சுய இன்பம் காணும் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவாக தான் இருக்கிறது” என கூறியுள்ளார்.
20+ சராசரியாக இளம் வயதில் (இருபதில்) 21 முறை சுய இன்பம் காணும் ஆண்கள் மத்தியில் 19% புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவாக உள்ளது எனவும், 7 முறை சுய இன்பம் காணும் ஆண்கள் மத்தியல் நாற்பது வயதில் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 22% குறைவாக உள்ளது எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன? பலர் பொதுவாக சுய இன்பம் காணுதல் தவறு என கூறினும், இது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றும், மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இளம் வயதில் உறவில் பாதுகாப்பாக ஈடுபட வேண்டும். இதன் தாக்கம் 40 களில் கூட எதிரொலிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.