Home சூடான செய்திகள் மலட்டு தன்மைக்கு மருந்து: கூறல் கத்தாழை மீன் ஒரு கிலோ ரூ.2 லட்சம்

மலட்டு தன்மைக்கு மருந்து: கூறல் கத்தாழை மீன் ஒரு கிலோ ரூ.2 லட்சம்

19

அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்து கட்டுமாவடி வரை 37 மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது, கூறல் கத்தாழை மீன்கள் அகப்படும். பொதுவாக மீன்களின் வயிற்றில் நெட்டி (காற்றுப்பை) உள்ளது. ஆனால், கூறல் கத்தாழை மீனின் நெட்டி மலட்டு தன்மை நீக்குவதற்கான மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், முகவர்கள் மூலம் மீன் வியாபாரிகளிடம் வாங்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இதுதொடர்பாக மீனவர் காளிதாஸ் கூறுகையில், பெரிய வகை கூறல் மீனில் உயர்ரக நெட்டி இருப்பதால் அந்த மீனுக்கு அதிக கிராக்கி உள்ளது.

ஆண் கூறல் கத்தாழை மீன்கள் விலை அதிகமாகவும், பெண் கூறல் மீன்கள் விலை குறைவாகவும் விலை போகிறது. ஆண் மீனில் நெட்டி அடர்த்தியாகவும், பெண் மீனில் நெட்டி அடர்த்தி குறைந்து காணப்படுவதால் பெண் மீனின் விலை குறைவாக உள்ளது. ஆண் கூறல் மீனின் நெட்டி 1 கிலோ ரூ.2 லட்சத்துக்கும், பெண் கூறல் கத்தாழை மீனின் நெட்டி ரூ.1 லட்சத்துக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஒரு மீனுக்கு ஒரு நெட்டி தான் இருக்கும். கூறல் கத்தாழை மீன் நெட்டியில் உயர்வகை மருந்து தயார் செய்யப்படுவதால் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நெட்டி பயன்படுத்தி உயர்வகை சூப்பு தயார் செய்யவும் வெளிநாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அனுப்பப்படுகிறது. கூறல் கத்தாழை நெட்டிக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.