டென்ரோஃபில்லா என்பது மரத்தினை கட்டிபிடிப்பது, காதலிப்பது, அதனுடன் உறவு கொள்வது.
இது நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு அசாதாரண செயலாக காணப்பட்டாலும், இதுவும் நமது உலகில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது தான் உண்மை.
ஐரோப்பாவை சேர்ந்த மார்க் கிரிப்த் என்பவர் ஒரு ஆய்வு கட்டுரையை அவரது பிளாகில் வெளியிட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னதாக மனிதர்களின் சூதாட்ட அடிக்ஷன், உச்சக்கட்ட விசித்திர செயற்பாடுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.
இப்போது இவர் மரத்தின் மீதான செக்சுவல் அடிக்ஷனான டென்ரோஃபில்லா பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.
பண்டைய காலத்தில்…
பண்டைய காலத்தில் சில கலாச்சாரங்களில் மரங்கள் கருவளம் சார்ந்து சிம்பலாக இருந்துள்ளது என்றும். ஆண்கள் அதன் மீது விந்தை பாய்ச்சுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
2 பேரின் கதைகள்:
இந்த ஆய்வில் இரண்டு பேரின் வாழ்க்கை பெரும் வியப்பை அளித்தது. முதலாம் நபர், மரத்தில் பெண்ணுறுப்பு போன்ற துளையை இட்டு அதனுடன் தனது காதலி, மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வது போல உறவின் ஈடுபட்டு வந்துள்ளார். மற்றொரு நபர் மரத்தின் இலைகளை பெண்ணுறுப்பு போல உருவாக்கி அதனுடன் புணர்ந்து வந்துள்ளார். இருவர்களையும் ஊர் மக்கள் நேரில் அவர்கள் செயல் கண்டு, விரட்டப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. சால்ட் பேப்பர்:
ஒரு நபர், தான் மரத்துடன் உறவு கொள்ளும் முன்னர் சால்ட் பேப்பர் கொண்டு அதை சாப்ட் ஆக்கிவிட்டு தான் கொள்வேன் என கூறியுள்ளார். டென்ரோஃபில்லா எனப்படும் இந்த தாவரம் சார்ந்த காம உணர்வு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பலர் இது போன்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளனர்.
4. பலவகை:
ஓரினச் சேர்க்கையை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் மக்களுக்கு இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கலாம். ஆனால், டென்ரோஃபில்லா போல பல விசித்திர செக்ஸ் ஆசைகள் கொண்ட மனிதர்கள் மற்றும் காம இச்சை உணர்வு கொண்டுள்ளவர்கள் பலர் நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.