மூளைக்கு தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறுமயக்கம் ஏற்பட அடிப்படைக் காரணம். சில காரணங்களால், ரத்த ஓட்டம், சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது.
மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது.
மயங்கித் தரையில் விழுந்ததும், ரத்த ஓட்டம் சரியாகி மயக்கமும் சரியாகி விடுகிறது. காலை உணவை தவிர்ப்பது. உறக்கமின்மை. வெயிலில் அதிக நேரம் நிற்பது போன்றவையே காரணம்.
மயக்கமுற்றவர்களுக்கு முதலுதவி என்ன?
* மயக்கம் அடைந்தவரை, உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
* ஆடைகளின் இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிடுங்கள்.
* தலை கீழேயும், பாதங்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு தரையில் படுக்க வையுங்கள்.
* சில நிமிடங்களுக்குப் பாதங்களை உயர்த்திப் பிடித்துக்கொள்வது நல்லது.
* தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைத்தால், மூச்சுக் குழாய் அடைபடாமல் இருக்கும்.
* முகத்தில் ‘சுளீர்’ என தண்ணீர் தெளியுங்கள்.
கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.