Home ஜல்சா மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

66

தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதனின் கண்டுபிடிப்பிற்கு எல்லையில்லை என்றே சொல்லலாம். என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியின் அளவு கூடிக்கொண்டே போனாலும் அதன் எதிர்வினைகள் பன்மடங்காக அதிகரித்துக்கொண்டே போகிறது. கடைசியில் மனிதனின் அழிவு அவன் கண்டுபிடிப்புகளாலே தான்.

மனிதனின் உறவுப்பாலத்தை உடைக்க வந்ததுதான் இந்த செக்ஸ் பொம்மைகள். வரும் காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளவே மனிதன் விரும்பமாட்டான் போலிருக்கிறது. மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

சுயஇன்பம் காணுதல்-
சுயமாக இன்பம் காணுதல் போன்ற செயல்களில் கூடுதல் இன்பம் அடைய இந்த செக்ஸ் கருவிகள் தயாரிக்கப்பட்டன. ஆண்குறி, பெண்குறி, வைப்ரேட்டர்கள் என இருந்த இந்த செக்ஸ் கருவிகள், எவல்யூஷனாகி ஆண் செக்ஸ் பொம்மை, பெண் செக்ஸ் பொம்மை என்று உருமாறியிருக்கிறது.

மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

கொரியன், ஜப்பான்
கொரியன், ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடுகளில் இந்த செக்ஸ் பொம்மை உற்பத்தி ஏகபோகமாக நடந்து வருகிறது. இதை வாங்க லைனில் நிற்கிறார்கள். இந்தியா மற்றும் இலங்கையில் இது தடைசெய்யப்பட்ட பொருளாக இருக்கிறது. முக்கியமாக கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு அதிகமாக இருக்கின்றன.

மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

ஏன் இந்த விபரீத விளையாட்டு?
இந்த செக்ஸ் பொம்மைகளின் வருகை பாலியல் தொழில் மற்றும் பால்வினை நோய் தொற்று அபாயம் போன்றவற்றை அழிக்க உதவும் என்று தான் கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இந்த செக்ஸ் பொம்மைகள் மூலம் மனித இனத்தின் உறவு சங்கிலி அறுபடும் நிலை உருவாக துவங்கியிள்ளது.

மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

பொம்மையுடன் திருமணம்!
உலக மக்களில் ஆண், பெண் இருபாலரும் செக்ஸ் பொம்மைகளை திருமணம் செய்துக் கொள்ள துவங்கியுள்ளனர். இதனால் உறவில் செக்ஸ் மட்டுமே பிரதானமாகவும், தனது துணை தன் பேச்சை கேட்கும் ஒரு அடிமையாக மட்டும் இருந்தால் போதுமென்ற கருத்து நிலை அதிகரிக்க துவங்கியுள்ளது.

மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

விவாகரத்துக்குப் பின் துணை பொம்மையே!
துணை பிரிந்தாலோ, சண்டை, விவாகரத்து ஏற்பட்டாலோ அதற்கான தீர்வை தேடாமல், செக்ஸ் பொம்மை தீர்வு காணும் பொருளாக மாறிவருகிறது. முக்கியமாக ஜப்பானியர்கள் மத்தியில் துணை மீது ஏற்படும் கோபத்திற்கு தீர்வு செக்ஸ் பொம்மைகள் தான் என்ற நிலை அதிகரித்து வருகிறது.

மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

திருமணமாகாதவர்களுக்கு இச்சையாக!
திருமணம் ஆனவர்கள் ஒருபுறம் இப்படி இருக்க, திருமணமாகாதவர்கள் தங்கள் இச்சை பசிக்கு சரியான தீர்வாக செக்ஸ் பொம்மைகளை காண்கிறார்கள். மேலும், தாங்கள் விரும்பும்படி செக்ஸ் வைத்துக் கொள்ள இயலாதவர்கள் செக்ஸ் பொம்மைகளை கொண்டு ஆசைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். இதனால் மிகுதியாக பாதிக்கப்படுவது ஒரு நபரின் மனநலமும், மக்களின் உறவு சங்கிலி இணைப்பும் தான்.

மனிதனும் செக்ஸ் பொம்மைகளும்

உறவுகள் என்னாகும்? ஒரு தலைமுறையில் இந்த செக்ஸ் பொம்மை தாக்கம் ஏற்படுத்தினாலே உறவு சங்கிலி அறுந்துவிடும். அப்பா – அம்மா என்ற கருதான் ஒரு குடும்பத்தை உருவாக்கி அதன் பால் உறவு சங்கிலி உருவாகக் காரணமாக இருக்கிறது. இந்த செக்ஸ் பொம்மைகளின் தாக்கம் இந்த அப்பா – அம்மா உறவையே சீர்குலைத்துவிடுகிறது. மனிதனின் எவல்யூஷனில் அணு ஆயுத கண்டுபிடிப்பிற்கு பிறகு மிகவும் மோசமான கண்டுபிடிப்பு இந்த செக்ஸ் பொம்மைகள்.