Home சமையல் குறிப்புகள் மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு

மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்பு

32

Captureதேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ

வெங்காயம் – 2 ( நறுக்கியது)

தக்காளி – 2 ( நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 5 ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு…

வரமிளகாய் – 6

மல்லி – 2 ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்

சோம்பு – 1/2 ஸ்பூன்

கசகசா – 1 ஸ்பூன்

உடைத்த கடலை – 1 ஸ்பூன்

பட்டை – 1 இன்ச்

கிராம்பு – 3

தேங்காய் – 1 பத்தை

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்

பிரியாணி இலை – 1

சோம்பு – 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் – 2

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிவிட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பின்பு அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள் போட்டு , சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு அடுப்பை 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்தால் குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்ததும் இறக்கி . கொத்த மல்லியைத் தூவி மூடி வைக்கவும்