தலைமுடியின் வேர்களில் பொடுகு அதிகமாக சேர்ந்தால் அரிப்பை உண்டாக்கும். இது கூந்தலின் அழகைக் கெடுப்பதால் “”கேசத்தின் எதிரி” என அழைக்கப்படுகிறது. பொடுகைக் குணப்படுத்த பல்வேறு இயற்கை சிகிச்சைகளும் உணவுக் கட்டுப்பாடுகளும் உள்ளன.
பொடுகே-போ-போ- (1)
* வெண்மிளகை பால் விட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளிக்க பொடுகு போகும்.
* பசலைக் கீøயை, மூன்று நாட்கள் அரைத்து, தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு விலகும்.
* வசம்பைத் தட்டி, தேங்காய் எண்ணெயில் ஊறப் போட்டு அந்த எண்ணையைத் தடவி வரலாம். பொடுகு அகலும்.
* நல்லெண்ணையில் சிறிது வேப்பம்பூ, வெல்லம் சேர்த்துக் காய்ச்சி, தலைக்குப் பூசி ஊறிய பின் குளித்தால் பொடுகு உதிரும்.
* கொஞ்சம் யூகலிப்டஸ் ஆயிலை சூடுபடுத்தி தலையில் தேய்க்கவும். ஒரு டவலை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையைச் சுற்றிக் கட்டி விடவும். இவ்வாறு சில நாள் தொடர்ந்து செய்ய பொடுகு மறையும்.
* இரண்டு டீஸ்பூன் மருதாணிப் பவுடர், ஒரு டீஸ்பூன் காப்பி பவுடர், ஒரு முட்டை, அரை கப் தயிர் இவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மணிநேரம் ஊற வைத்துக் குளிக்க,பொடுகு நீங்கும்.
* அரை கப் தேங்காய்ப் பாலுடன் நான்கு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.
* வில்வக்காயைப் பொடியாக்கி அதில் சம அளவு சிகைக்காய் தூள் கலந்து தினமும் தலைக்குக் குளித்து,பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம். தீரும்.
* பொடுதலை மூலிகையை இடித்து, சாறெடுத்து சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சவும். சாறு வற்றியதும் வடிகட்டி தலையில் பூசிவர பொடுகு மறையும்.
* இருநூற்றைம்பது மில்லி தேங்காய் எண்ணையில் ஐம்பது மில்லி அருகம்புல் சாறையும், ஐம்பது மில்லி கரிசலாங்கண்ணி சாறையும் கலந்து காய்ச்ச வேண்டும். பாதி சாறு வற்றியதும் அதனுடன் நூறு மில்லி தேங்காய்ப் பாலை கலந்து காய்ச்ச வேண்டும். நீர்வற்றி எண்ணெய் பிரியும் சமயம் பதினைந்து கிராம் அதிமதுரத்தை, தூள் செய்து போடவும். தூள் சிவந்ததும் இறக்கி வடிகட்டி, தலைக்குப் பூசி வர பொடுகு போகும்.
* பழங்கள், கறிகாய்கள், முழு தானியங்கள், தேங்காய் கலந்த எள் சட்னியை உணவில் சேர்க்கவும். பொடுகுள்ளவர்கள் சர்க்கரையையும், மாவுப்பொருள்களையும் கண்டிப்பாக குறைக்க வேண்டும்.