நிறைய பெண்கள் அவர்களது பெண்ணுறுப்பில் ஏற்படும் வலிக்கு மாதவிடாயும், வெள்ளை போக்கும் தான் காரணம் என கருதுகின்றனர். இதில், பெம்பாலானவர்கள் இந்த வலிக்கு என்ன காரணமாக இருக்கும் என கூட யோசிப்பதில்லை, மருத்துவர்களிடம் இந்த பிரச்சனையை குறித்து ஆலோசிப்பதும் இல்லை. பெண்களுக்கு பெண்ணுறுப்பில் வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. ஏன், பாவினை நோய் தொற்றினால் கூட பெண்களது பெண்ணுறுப்பில் வலி ஏற்படலாம் மற்றும் உடலுறவின் போது அதிக வேகம் காட்டுதல், ஈஸ்ட் தொற்று மற்றும் அந்தரங்க உறுப்பில் சுயஇன்பம் காண ஏதேனும் பொருட்களை ஊடுரவ செய்தல் போன்ற காரணங்களினால் கூட பெண்ணுறுப்பில் வலி ஏற்படலாம்.
எனவே, பெண்கள் அவர்களது பெண்ணுறுப்பில் வலி ஏற்படும் போது அது மாதவிடாய் காரணமாக மட்டும் தான் ஏற்படுகிறது என தவறாக எண்ணி பெரும் பிரச்சனைக்கு ஆளாகிவிட வேண்டாம். தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து தீர்வு காண்பது தான் சரியானது. இனி பெண்ணுறுப்பில் ஏற்படும் வலிகளுக்கு மாதவிடாய் தவிர்த்து வேறென்ன எல்லாம் காரணமாக இருக்கலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்…
ஹெர்பெஸ் (Herpes)
ஹெர்பெஸ் என்பது ஒரு பால்வினை தொற்று (STI) ஆகும். இதன் காரணமாக பெண்களின் பிறப்புறுப்பில் வலி மற்றும் கொப்பளங்கள் ஏற்படும். எனவே, பெண்கள் அவ்விடத்தில் வலி ஏற்படும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்ஈஸ்ட் தொற்று ஏற்படும் போது பெண்களின் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும். பெண்கள் அவர்களது பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். அசுத்தமான செயல்களினால் தான் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று பெரும்பாலும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வறட்சி
பெண்ணுறுப்பில் மாதவிடாயின் முடிவில் ஏற்படும் வறட்சியின் காரணமாக கூட பெண்ணுறுப்பில் வலி ஏற்படலாம்.
இடுப்பு எலும்பு பகுதியில் அழற்சி
பெண்களுக்கு அவர்களது இடுப்பெலும்பு பகுதியில் ஏற்படும் அழற்சியின் காரணமாக கூட பெண்ணுறுப்பு பகுதியில் வலி ஏற்படுகிறது.
ஈஸ்ட்ரோஜன்
பெண்களுக்கு அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவில் குறைப்பாடு ஏற்படும் போது கூட பெண்ணுறுப்பில் வலி ஏற்படுகிறதாம்.
கருத்தடை மாத்திரைகள்
திருமணமான புதிதில் இளம் பெண்கள் அதிகமாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வது கூட ஒருவகையில் அவர்களது பிறப்புறுப்பு வலிக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆணுறுப்பு
உடலுறவுக் கொள்ளும் போது சில சமயங்களில் ஆணுறுப்பின் செயல்பாடுகளின் காரணங்களினாலும் பெண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பு வலி ஏற்படும்.
உடலுறவு
உடலுறவுக் கொள்ளும் போது சிலர் பெண்கள் உச்சம் அடைவதற்காக, பிறப்புறுப்பை பல வகையில் தீண்டுதலும் அவர்களுக்கு ஏற்படும் அவ்விடத்தில் வலி ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது