என் தோழியின் பிரச்னைக்கு தீர்வு வேண்டி, இக்கடிதம் எழுதுகிறேன்.
என் தோழிக்கு திருமணமாகி, 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது; அவள் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவளும் டிகிரி முடித்து, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக
பணியாற்றுகிறாள். பெண்களைப் பார்த்து, பெண்களே மயங்குவ து கடினம். ஆனால், என் தோழி, பெண்களை விரும்புகிறாள். எல்லாப்பெண்களையும் இல்லை; சில குறிப்பிட்ட பெண்களை மட்டும்.
அவள் பள்ளியில் படிக்கும் போதே இப்படித்தான். ஏதா வது ஒரு பெண்ணை பிடித்து இருந்தால், அவளிடம் மிகுந் த அன்புடன் பழகுவாள். பின், அந்த அன்பு அவளுக்குள் விபரீத எண்ணத்தை ஏற்படுத்தி விடும். அதன் காரணமாக, அந்த பெண்ணை அனுபவிக்க எண்ணுவாள். ஆனால், இதுவரை அப்படி யாரிட மும் நடந்துகொண்டதில்லை. தொட மட்டுமே செய்வாள்; மற்ற படி வேறுஎதுவும் நடந்ததில்லை.
இந்த மாதிரி எண்ணம் அவளுக்கு இருக்கிறது என்று, அவள் கணவ ருக்கும் தெரியும். ஆனால், அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள் ளவில்லை. அவரும் இவள் மேல் அன்பாகத் தான் இருக்கிறார்.
என் தோழிக்கு இப்போது தான், தன் எண்ணம் தவறு என்று தோன்றுகிறது. இதனால், மிகவும் மனம் வேதனைப்படுகிறாள். தான் ஆணா, பெண்ணா என்றே குழ ம்புகிறாள். அவள் மன வேதனைக்கு, என்னால் தீர்வு சொல்ல இயலவில்லை.
யோகா செய்து, மனதை கட்டுப்படுத்துகிறாள். ஆனாலும், அவள் எண்ணம் திடீரென்று மாறி விடுகிறது. இதற்கு தீர்வு காண, மன நல மருத்துவரை அணுகவும் பயமாக இருக்கிறது. என்னிடம் முத லில் அப்படித்தான் இருந்தாள். இப்பொழுது அப்படி இல்லை. கார ணம், அவளை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
இப்பொழுது அவளின் பிரச்னை, எல்லாவற்றையும் என்னிடம் கூறியதால், என்னை வேறு மாதிரியாக நினைக்க அவளால் இய லவில்லை. என்னை தோழியாக மட்டுமே நினைக்கிறாள். அவ ளுக்கு இருப்பது பெண் குழந்தை. தன்னுடைய நடத்தையால், தன் குழந்தைக்கும் இம்மாதிரியான எண்ணம் வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள். அவளை எப்படி மாற்றுவது? இதற்கு தீர்வு சொல் லுங்கள்…
பின்குறிப்பு: அவள் மற்ற விஷயங்களில் நேர்மையாகத் தான் இருப்பாள். குடும்பத்தை சந்தோஷமாக நடத்துவது, பக்கத்தில் இருப்பவர்களிடம் சகஜமாக பேசுவது என்று, எல்லா விஷயத்தி லும் சரியாகத் தான் இருக்கிறாள்.
பதில் :
உன் தோழியின் பிரச்னைக்கு வருவோம்.
*’ஆணா, பெண்ணா என்று குழம்புகிறாள்…’ என்று, எழுதியிருந் தாய்; கவலை வேண்டாம். அவளுக்கு, 5 வயதில் பெண் குழந்தை இருப்பதால், அவள் பெண்தான்.
ஒருசில குறிப்பிட்ட பெண்களையே விரும்புகிறாள் என்றால், அவர்களுடைய குணநலன்கள் பிடித்திருக்கலாம். தனித்து வாழ விருப்பம் இல்லாமல், மற்றவர்களுடன் கூடி இருப்பதை விரும்பு கிறவளாக உன்தோழி இருக்கிறாள். எல்லா பெண்களும், ஒரே மாதிரியாக தங்களின் அன்பை வெளிப்படுத்த மாட்டார்கள். அதிக மாக அன்பு செலுத்துவது, உன் தோழிக்கு பழக்கமாய் இருக்கிற து.
* ‘இதுவரை அப்படி யாரிடமும் நடந்து கொள்ளவில்லை. ஆனா ல், ஒரு பெண்ணை அனுபவிக்க எண்ணுகிறாள்…’ என்று கூறியி ருக்கிறாய். இதை, ‘செக்சுவல் பேன்டசி’ என்பர். இத்தகையோர் தங்களுடைய ஆசைகளை வேறுவிதமான சில்மிஷ விளையாட் டுகளினால் திருப்திப்படுத்திக் கொள்வர். நீயே குறிப்பிட்டது மாதிரி தொடவும், குழந்தையாக இருந்தால், கன்னத்தில் முத்தமி ட்டு, கட்டி அணைத்து தங்கள் ஆசைகளை, நிறைவேற்றிக் கொ ள்வர்.
இது எல்லையை தாண்டும் வரை, பிரச்னை இல்லை. அப்படி கிடைக்காத பட்சத்தில், சமுதாய வரைமுறைகளையெல்லாம் புறக்கணித்து, வேறு நபரிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆசை பட்டால், அவளது நடத்தையை குறை சொல்லி, பலர் அவளை அனுபவிக்க நினைக்கலாம். இது, அப்பெண்ணின் வாழ்கையை மட்டுமல்ல, அவளின் பெண் குழந்தையின் எதிர்காலத்தையும் பாதிப்படையச் செய்யும்.
மனநல மருத்துவரிடம் செல்ல பயம் வேண்டாம். ஆண் மனநல மருத்துவரிடம், இதை பற்றி சொல்ல தயக்கமாக இருந்தால், பெண் மனநல மருத்துவரை தாராளமாக அணுகலாம். அரசு மரு த்துவமனைகளில் இலவசமாக சிகிச்சையும், மனநல ஆலோச னைகளும் தருகின்றனர்.
மனதை ஒருநிலைப்படுத்த, உடலை ஆரோக்கியமாக வைத்திரு க்க யோகா அவசியம் தான். அத்துடன், மனநல ஆலோசகரின் உத வியை பெறுவதன் மூலம், திடீரென்று வரும், ‘அந்த மாதிரியான’ எண்ணங்களை, படிப்படியாக குறைக்கலாம்.
‘கணவனின் துணையோடுதான் காமனை வென்றாக வேண்டு ம்…’ என்கிறார் கவிஞர் கண்ணதாசன். உன் தோழியிடம் இதை, விளக்கிச் சொல். உன் தோழிக்கு வந்திருப்பது, ‘செக்ஸ் கனவுக ள்’தானே தவிர, பயப்படும் மாதிரி வேறு ஒன்றுமில்லை. அவளிட ம் நீ அன்பு செலுத்தி, அரவணைத்து, முடிந்தால், நல்ல மனநல ம ருத்துவரின்உதவியால், சாதிக்கும்பெண்ணாக அவளை மாற்று.
இவை யாவும் தோழியாகிய உன்னிடம் தான் இருக்கிறது. உன் னால் செய்து காண்பிக்க முடியவில்லை என்றால், வேறு யாரால் செய்ய முடியும்?