Home பெண்கள் பெண்குறி பெண்ணின் அந்தரங்க உறுப்பின் பாகங்கள்

பெண்ணின் அந்தரங்க உறுப்பின் பாகங்கள்

165

liplockபெண்ணின் இனவிருத்தி உறுப்பின் வெளிப்பாகங்கள்
Ø உல்வா Vulva : உங்கள் இரு தொடைகளுக்கு இடையே காணப்படும் இனவிருத்தி உறுப்புகள்

Ø வெளிமடிப்புகள் Labia Major : தடித்த சதைப் பகுதி கால்கள் ஒன்றாக இருக்கும்பொழுது இவை மூடிக்கொள் ளும். இது உள் பாகங்களை பாதுகாக்கிறது.

Ø உள்மடிப்புகள் Labia Minor : இது மிருதுவான தோல்பகுதி. இதில் முடி இருக்காது. தொட்ட உடனே உணர்ச்சி வரும். உடலுறவின் போது இப்பாகம் விரிவடையும். இதன் நிறம் கருமையாகும்.

Ø யோனிக் குழாயின் திறப்பு Vaginal Orifice : யோனியின் திறப்பு வாயில்

Ø ஹைமன் Hymen : யோனியின் திறப்பில் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப் பகுதி. கடின வேலை விளையாட்டு போன்ற நடவடிக்கைகளின் போது இத்தோல் பகுதி விரிவடையும் அல்லது கிழிபடலாம். அப்போது லேசாக இரத்தம் வரும். முதன்முறையாக உடலுறவின் போதும் இது கிழிபடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு ஹைமன்னே இருக்காது.

Ø மோன்ஸ் Mons : முடிகள் அடர்ந்த, உல்வாவின் தடித்த மேல் பகுதி.

Ø கிளிட்டோரிஸ் Clitoris : மலர்மொட்டு போன்று சிறு பாகம். உல்வாவின் பாகங்களிலேயே மிகுந்த உணர்ச்சி தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியுள்ள பகுதியையும் தேய்த்தால் Clitorial Stimulation பெண்ணுக்கு பாலியல் வேட்கை Female Sex Desire அதிகமாகி உச்சக் கட்டத்தை Orgasm அடைவாள்.

Ø சிறுநீர்த்துவாரம் Urinary Opening : சிறுநீர் குழாயின் வெளித்திறவு வாயில். சிறுநீர்ப் பையில் சேமிக்கப்பட்டுள்ள சிறுநீர் இக்குழாய் வழியேதான் உள்ளிருந்து வெளியே வருகிறது.

Ø ஆசனவாய் Anus : குடல்வாய் திறப்பு, கழிவு (மலம்) இதன் வழியாக வெளியேறும்

பெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள்
ü சினைப்பை Ovaries: ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்கு கிறது. ஒரு பெண்ணுக்கு இரு சினைப்பைகள் இருக்கும் கருப்பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும்.

ü கர்ப்பப்பைவாய் Cervix : கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல்கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக்குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழியே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண்குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இது தடுக்கிறது. குழந்தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.

ü .ஃபெலோப்பியன் குழாய்கள் Fallopian Tube : இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிறது. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கருப்பையை அடைகிறது.

ü கர்ப்பப்பை Uterus : உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாதவிடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறுகிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது.

ü யோனிக் குழாய் அல்லது பிறப்புவழி Vaginal wall : உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பைக்கு செல்லும் பாதைதான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேசமானது. உடலுறவின் போதும் குழந்தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் Vaginal Lubrication யோனிக்குழாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், கிருமிகள் தாக்காமலும் பாதுகாக்கிறது.