Home சூடான செய்திகள் பெண்கள் வெள்ளி நகை அணிவது, அதை கட்டுப்படுத்த தான்..!

பெண்கள் வெள்ளி நகை அணிவது, அதை கட்டுப்படுத்த தான்..!

23

நகைகள் என்பது நம் மூதாதையர்கள் காலத்தில் இருந்து, மிக முக்கியம் வாய்ந்தவையாக கருதப்பட்டு வந்துள்ளது. இதற்கு காரணம், நகைகள் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி, நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

உணர்ச்சியை கட்டுப்படுத்தும் வெள்ளி நகைகள்:

உணர்ச்சி வசப்படுதல் என்பது, எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். வெள்ளிக்கொலுசு குதிகால் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை.

சின்ன சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல் வேலைப்பாடுகள் கூடிய கொலுசுகள் எல்லாம் பழைய பணியாகிவிட்டன. தற்போது கொலுசுகள் எளிமையான வேலைப்பாடுகளுடன் மெல்லிய சங்கிலி போல வடிவமைக்கப்படுகின்றன. சில நகை தயாரிப்பாளர்கள் கொலுசையும் மெட்டியையும் இணைத்து ஒரு வடிவம் கொடுத்துள்ளார்கள். முன்பு கொலுசுகள் புடவையுடன் மட்டும் அணியப்பட்டு வந்தது.

சில பெண்கள் ஒரே காலில் இரண்டு விதமான கொலுசுகளை அணிகிறார்கள். நாகரிக மங்கையர் தங்கம், வெள்ளி கொலுசுகள் மட்டுமல்லாமல் லெதர், பிளாஸ்டிக், நைலான், சாதாரண நூல் என பல வகை பொருட்களைக் கொண்டு நவீனபாணியில் தயாரித்த கொலுசுகளை அணிகின்றார்கள்.

தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்படும் கொலுசுகள், சின்ன சின்ன முத்துக்கள் சேர்க்கப்பட்டு மெல்லிய சங்கிலி கொண்டு இணைக்கப்பட்டு இருக்கும். கொலுசு முழுக்க முத்துக்களை இணைத்தோ அல்லது ஆங்காங்கே நான்கு முத்துக்கள் இணைத்தோ தயாரிக்கப்படுகின்றன.

வெள்ளியிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஆக்சிடைஸ்ட் வெள்ளி எப்போதும் நிறம் மங்கிக் காணப்படும். கொலுசுகள் இவ்வெள்ளியிலும் செய்யப்படுகின்றன. செயற்கை கற்கள் அதாவது போல்கி கற்கள், குந்தன் கற்கள், குறை மணிக்கற்கள் (செமி பிரிசியஸ்) பதித்து செய்யப்படும் தண்டைகள், தற்போது பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.