Home பாலியல் பெண்கள் எந்த வயதுவரை உறவு கொள்ளலாம்?.

பெண்கள் எந்த வயதுவரை உறவு கொள்ளலாம்?.

96

நம் நாட்டில் எல்லோரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் விஷயம் உடலுறவு. குறிப்பாக, பெண்கள் இதைப்பற்றி பேசுவது, மிக மோசமான செயல் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், உடலுறவு பற்றிய அனைத்து தகவல்களையும் ஆண்கள் மற்றும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

வாழும் காலம் முழுவதும் பெண்கள் உடலுறவில் ஈடுபாடு காட்டமுடியும் என்றாலும், பெரும்பாலான பெண்கள் மெனோபஸ் காலத்தைக் கடந்த பிறகு பிறப்புறுப்பு வழியான உறவுகளை விரும்புவதில்லை. அதற்கு முக்கியக் காரணம், உறவுக்குத் தயாராகச் சுரக்கும் திரவங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சுரப்பதில்லை. அதனால், ஆண் உறுப்பு உள்ளே சென்று வரும் சமயத்தில் எரிச்சல், வலி உண்டாக வாய்ப்பு உண்டு.

இதை ஜெல்லி அல்லது எண்ணெய் போன்ற பொருள்களின் உதவியால் தீர்த்துக்கொள்ள முடியும் என்றாலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஆண்களுக்கு வெளி விளையாட்டுகள் மூலம் இன்பம் தருவதுடன் தங்கள் ஆசைகளை அடக்கிக்கொள்கிறார்கள். ஆனால், பெண்களும் இறுதிக்காலம் வரையிலும் உடலுறவு இன்பம் அனுபவிக்க இயலும் என்பதுதான் உண்மை.

வயது, மனம், ஆசை போன்றவற்றைப் புரிந்த ஆண் துணையாகக் கிடைத்தால், பெண் எந்த ஒரு வயதிலும் இன்பம் காண முடியும். பிறப்புறுப்பு தவிர, வயதானதும் மார்பகங்கள் தொங்கிப்போகும் நிலையில், அதை ஆண்களிடம் காட்டுவதற்கும் பெண்கள் தயங்குகிறார்கள் என்பதால், அறுபது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், உடலுறவு இன்பத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் அதிலிருந்து விடுபட்டு வருகிறார்கள்.