உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன படியுங்களேன்.
பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
ஒரு புண்ணியமும் இல்லை பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லையாம். உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
300 பெண்கள் பங்கேற்பு இந்த ஆய்வுக்காக 18 முதல் 35 வயது வரையிலான 300 பெண்களின் மார்பகங்கள் அளந்து பார்க்கப்பட்டன. பிரா அணிந்த நிலையிலும், பிரா அணியாத நிலையிலும் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
எந்த பாதிப்பும் இல்லை இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்ததாம். மேலும் அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள் நன்றாக இருந்ததும் தெரிய வந்தது
.
அணிந்தால் பாதிப்பு ஆனால் பிரா அணியும் வழக்கம் கொண்ட பெண்களுக்கு இதில் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு சீக்கிரமே மார்புகள் தொங்கிப் போகக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறதாம்.
மூச்சு விட சிரமம் ஆய்வில் பங்கேற்ற 28 வயதுப் பெண் ஒருவர் கூறுகையில், பிரா அணிந்திருக்கும்போது எனக்கு மூச்சு விடக் கூட சிரமம் இருக்கும். ஆனால் பிரா அணியாத நிலையில் நான் இயல்பாக மூச்சு விடமுடிகிறது என்றார். இப்போது இவருக்கு பிரா மீதான மோகம் குறைந்து விட்டதாம்.
பிரா அவசியமில்லை மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக, மார்பகங்களுக்கு பிரா அவசியமே இல்லை என்று இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பிரான்சின் பெஸன்கான் நகரில் உள்ள பிரான்ச் கோம்டே பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் டெனிஸ் ரூயிலன் கூறியுள்ளார். இதைத்தான் அவர்களுக்கு ஆய்வு நிரூபித்துள்ளதாம்.
ஒரேடியா அப்படி சொல்லாதீங்க இருப்பினும் ஒரேயடியாக பிராவை நிராகரித்து விட முடியாது என்றும், அவை பெண்களுக்கு உகந்ததல்ல என்று கூறி விட முடியாது என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.