உடல் உபாதைகள் மட்டுமன்றி, மன அழுத்தங்களைப் போக்குவதற்கும் இந்த யோகா மிகவும் உதவும். இந்த யோகா உங்கள் உடலின் மேற்பாகம் முழுவதும் இரத்தம் சீராகப் பாய்ந்து, நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். முடி இழப்பிற்கு ஒரு நல்ல தீர்வாக அமைவதோடு, செரிமானத்திற்கும் இந்த யோகா முறை உதவுகிறது.
முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு, கால்களை உங்கள் பிருஷ்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். அதாவது நீங்கள் உங்கள் பாதங்களின் மேல் இப்போது அமர்ந்துள்ளீர்கள். பின், உங்கள் இரு உள்ளங்கைகளையும் உங்கள் தொடைகளின் மேல் குப்புற வைக்கவும். உங்கள் முதுகுப் பகுதி நேராக இருக்க வேண்டும். இந்த நிலையில் அமர்ந்து கொண்டே, சீராகவும் ஆழமாகவும் மூச்சை இழுத்து இழுத்து விடவும். இவ்வளவுதான்.
இந்த போஸில் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு, அல்லது, முடிந்தால் 2 நிமிடங்கள் வரை இருக்கலாம். பின் இதே முறையைப் பல தடவை தொடர்ச்சியாகச் செய்து வந்தால் உங்கள் உடம்புக்கும், கூந்தலுக்கும் நல்லது. உங்களுடைய தொடைகளுக்கும் பிருஷ்டத்திற்கும் இந்த ஆசனம் மிகவும் நல்லது. நிறைய பெண்கள் தங்களுடைய பிருஷ்டம் பெரிதாக இருப்பதாகக் கவலைப்படுவதுண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த யோகா நிலை ஒரு வரப்பிரசாதம் தான்.