Home பாலியல் பெண்களின் செக்ஸ் உணர்வுகள்

பெண்களின் செக்ஸ் உணர்வுகள்

31

_செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.

பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.

திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.

இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.

எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகும்.

சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது.

பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.