Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் உடல் பிரச்சனை

பெண்களின் உடல் பிரச்சனை

16

மாதவிடாய் என்றாலே அதை ஒரு சுமையாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். அந்த மூன்று நாட்களை நினைத்து கவலைப்படாத இளம் பெண்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இந்த மாதவிடாய் உபாதையைக் கொடுத்தாலும் பெண்ணின் உடலமைப்பில் மிக முக்கியமான பணியாக விளங்குகிறது. பெண்ணின் உடலைத் தூய்மைப்படுத்த இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் இந்த மாதவிடாய். மாதவிடாய் பெண்ணின் உடலிலே ஆற்றும் பணிகள் மிகவும் அற்புதமானவை. மாதவிடாய் குறித்தும் அதன் பணிகள் குறித்தும் பெண்ணிற்கு பெண் அது எவ்வாறு மாறுபடுகின்றது என்பது குறித்தும் காண்போம்.
பொதுவாக மாதவிடாய் என்பது கருப்பையினுள் இருந்து இரத்தம் வெளியேறுவதையே குறிக்கிறது. மாதவிடாய் ஒழுங்காகத் தோன்றுவதற்கும் அதன் பணிகளை ஒழுங்காகச் செய்வதற்கும் கருவகங்களே முக்கிய காரணமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் வெளியேறும். இரத்தத்தின் அளவு 4 முதல் 6 அவுன்சுகளாக இருக்கும். இந்த மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை தோன்றுகிறது. இது பொதுவாக நான்கு நாட்கள் நீடிக்கிறது என்றாலும் பெண்ணிற்கு பெண் இந்த மாதவிடாய் காலம் வேறுபடலாம். மாதவிடாயின் போது தோன்றும் உதிரமானது கருப்பையிலிருந்தும் கடிதத்திலிருந்தும் வெளியேறும் அமிலப் புளிப்பு நீரினால் உறைந்து போகாமல் காக்கப்படுகிறது. அவ்வாறான அமிலத் தன்மையுள்ள கசிவுடன் சேராதிருந்தால் அது சாதாரண இரத்தம் போன்றே இருக்கும். மாதவிடாய் பெண்ணின் உடலிலே ஆற்றும் பணிகள் அதிகம். மிக அதிகமாகச் சேர்ந்து விடுகிற இரத்தத்தை வெளியேற்றி நல்ல உடல் நலம் பெறச் செய்கிறது. கர்ப்ப காலத்தில் கரு உருவாவதற்கும் வளர்வதற்கும் பயன்படுத்தப்படுகின்ற மிகுதியான இரத்தம் வெளியேற்றப்படுவதனால் உடலின் அமைப்பு முறைக்கு ஒரு சுமைக் குறைவு ஏற்படுகிறது. மேலும் இது பாலுணர்ச்சியை நிறைவு செய்கிற ஒரு விநோதமான முறையாக இருந்து, பெண்மையைக் காத்துக் கொள்வதற்கும் ஒரு முறையாக விளங்குகிறது. இன்றைய கருத்து என்னவென்றால், கருவகங்களில் கருவுறுவது நிகழாத போது அதில் ஏற்படும் சிதைவினால், கருப்பையில் மிகுதியாகச் சேர்ந்துள்ள இரத்தத்தை வெளியேற்றும் ஒரு முறையாக இது கருதப்படுகிறது.
மாதவிடாய் முதன் முதலில் பெண்களுக்கு 14 வயது முதல் 16 வயதிற்குள் தோன்றுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் மிக விரைவிலேயே ஏற்பட்டு விடுகிறது. மாதவிலக்கு தொடர்பான பணிகள் ஒரே சீராயும், நல்ல உடல் நலத்தோடும் தோன்றி நடைபெற்றால் ஒவ்வொரு நரம்பும், உறுப்பும், வலுவும் உணர்வுகளும் பெறும். உடல் நலனுக்கும் ஊறு விளைவிப்பது இல்லை. மாறாக இந்தக் காலத்தில் கவனக் குறைவும் உடலில் வலுவின்மையும் இருந்தால் ஒரு பெண்ணை அது எளிதில் நோய்வாய்ப்படுத்தி விடும். மாதவிடாய், காலங்களில் ஊட்டமான உணவளிப்பது மிகவும் அவசியம் ஆகும். இளம் வயதில் அளிக்கும் ஊட்டமானது ஒரு பெண்ணிற்கு கடைசி வரை உடலைப் பேணிப் பாதுகாக்க பயன்படும். மாதவிடாய் பெண்ணிற்கு பெண் வேறுபடுகிறது அளவிலும், நிறத்திலும், வலி குறைவு. வலி அதிகம் என்று பல்வேறாக மாறுபடுகிறது. ஒரு சிலருக்கு மாதவிடாய் காலந் தாழ்த்தி வரும் ஒரு சிலருக்கு உரிய காலத்தில் தோன்றாதிருக்கும் சிலருக்கு மிக விரைவில் அல்லது அடிக்கடி தோன்றுகிறது. சிலருக்கு வழக்கத்திற்கு விரோதமாகக் காணப்படும். அதாவது, மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் சில வேளைகளில் இரத்தம் நிறைந்த எச்சில் துப்புவது, அல்லது இரத்த வாந்தி எடுப்பது, மூக்கில் இருந்து இரத்தம் வடிதல், உதிரத்திற்கு பதில் வெள்ளை வடிதல் என்று சிலருக்கு வித்தியாசமாக மாதவிடாய் தோன்றும். வழக்கத்திற்கு மாறான இம்மாதிரியான மாதவிடாய் குறித்து கலவரம் அடையாமல் உரிய சிகிச்சை மேற்கொண்டால், அவை சரியாகிவிடும். ஒரு சிலருக்கு மாதவிலக்கு காலமும், அளவும் நீடித்திருக்கலாம். மேலும் சிலருக்கு அது மிகுந்த வலியும் துன்பமும் நிறைந்ததாய் இருக்கும். இதனை வலிமிக்க மாதவிடாய் என்பர். சிலருக்கு வலிமிக்க மாதவிடாய் காணப்படுவதற்கு நரம்பு வலியும், சில சமயங்களில் வலிப்பும் சேர்ந்து காணப்படும். மேலும் ஒரு சிலருக்கு மாதவிடாய் தடைகள் நிறைந்து வலிமிக்க மாதவிடாயாகத் தோன்றும்.
மாதவிடாய் என்றாலே அதை ஒரு சுமையாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். அந்த மூன்று நாட்களை நினைத்து கவலைப்படாத இளம் பெண்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இந்த மாதவிடாய் உபாதையைக் கொடுத்தாலும் பெண்ணின் உடலமைப்பில் மிக முக்கியமான பணியாக விளங்குகிறது. பெண்ணின் உடலைத் தூய்மைப்படுத்த இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் இந்த மாதவிடாய். மாதவிடாய் பெண்ணின் உடலிலே ஆற்றும் பணிகள் மிகவும் அற்புதமானவை. மாதவிடாய் குறித்தும் அதன் பணிகள் குறித்தும் பெண்ணிற்கு பெண் அது எவ்வாறு மாறுபடுகின்றது என்பது குறித்தும் காண்போம். பொதுவாக மாதவிடாய் என்பது கருப்பையினுள் இருந்து இரத்தம் வெளியேறுவதையே குறிக்கிறது. மாதவிடாய் ஒழுங்காகத் தோன்றுவதற்கும் அதன் பணிகளை ஒழுங்காகச் செய்வதற்கும் கருவகங்களே முக்கிய காரணமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் வெளியேறும். இரத்தத்தின் அளவு 4 முதல் 6 அவுன்சுகளாக இருக்கும். இந்த மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை தோன்றுகிறது. இது பொதுவாக நான்கு நாட்கள் நீடிக்கிறது என்றாலும் பெண்ணிற்கு பெண் இந்த மாதவிடாய் காலம் வேறுபடலாம். மாதவிடாயின் போது தோன்றும் உதிரமானது கருப்பையிலிருந்தும் கடிதத்திலிருந்தும் வெளியேறும் அமிலப் புளிப்பு நீரினால் உறைந்து போகாமல் காக்கப்படுகிறது. அவ்வாறான அமிலத் தன்மையுள்ள கசிவுடன் சேராதிருந்தால் அது சாதாரண இரத்தம் போன்றே இருக்கும். மாதவிடாய் பெண்ணின் உடலிலே ஆற்றும் பணிகள் அதிகம். மிக அதிகமாகச் சேர்ந்து விடுகிற இரத்தத்தை வெளியேற்றி நல்ல உடல் நலம் பெறச் செய்கிறது. கர்ப்ப காலத்தில் கரு உருவாவதற்கும் வளர்வதற்கும் பயன்படுத்தப்படுகின்ற மிகுதியான இரத்தம் வெளியேற்றப்படுவதனால் உடலின் அமைப்பு முறைக்கு ஒரு சுமைக் குறைவு ஏற்படுகிறது. மேலும் இது பாலுணர்ச்சியை நிறைவு செய்கிற ஒரு விநோதமான முறையாக இருந்து, பெண்மையைக் காத்துக் கொள்வதற்கும் ஒரு முறையாக விளங்குகிறது. இன்றைய கருத்து என்னவென்றால், கருவகங்களில் கருவுறுவது நிகழாத போது அதில் ஏற்படும் சிதைவினால், கருப்பையில் மிகுதியாகச் சேர்ந்துள்ள இரத்தத்தை வெளியேற்றும் ஒரு முறையாக இது கருதப்படுகிறது. மாதவிடாய் முதன் முதலில் பெண்களுக்கு 14 வயது முதல் 16 வயதிற்குள் தோன்றுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் மிக விரைவிலேயே ஏற்பட்டு விடுகிறது. மாதவிலக்கு தொடர்பான பணிகள் ஒரே சீராயும், நல்ல உடல் நலத்தோடும் தோன்றி நடைபெற்றால் ஒவ்வொரு நரம்பும், உறுப்பும், வலுவும் உணர்வுகளும் பெறும். உடல் நலனுக்கும் ஊறு விளைவிப்பது இல்லை.
மாறாக இந்தக் காலத்தில் கவனக் குறைவும் உடலில் வலுவின்மையும் இருந்தால் ஒரு பெண்ணை அது எளிதில் நோய்வாய்ப்படுத்தி விடும். மாதவிடாய், காலங்களில் ஊட்டமான உணவளிப்பது மிகவும் அவசியம் ஆகும். இளம் வயதில் அளிக்கும் ஊட்டமானது ஒரு பெண்ணிற்கு கடைசி வரை உடலைப் பேணிப் பாதுகாக்க பயன்படும். மாதவிடாய் பெண்ணிற்கு பெண் வேறுபடுகிறது அளவிலும், நிறத்திலும், வலி குறைவு. வலி அதிகம் என்று பல்வேறாக மாறுபடுகிறது. ஒரு சிலருக்கு மாதவிடாய் காலந் தாழ்த்தி வரும் ஒரு சிலருக்கு உரிய காலத்தில் தோன்றாதிருக்கும் சிலருக்கு மிக விரைவில் அல்லது அடிக்கடி தோன்றுகிறது. சிலருக்கு வழக்கத்திற்கு விரோதமாகக் காணப்படும். அதாவது, மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் சில வேளைகளில் இரத்தம் நிறைந்த எச்சில் துப்புவது, அல்லது இரத்த வாந்தி எடுப்பது, மூக்கில் இருந்து இரத்தம் வடிதல், உதிரத்திற்கு பதில் வெள்ளை வடிதல் என்று சிலருக்கு வித்தியாசமாக மாதவிடாய் தோன்றும். வழக்கத்திற்கு மாறான இம்மாதிரியான மாதவிடாய் குறித்து கலவரம் அடையாமல் உரிய சிகிச்சை மேற்கொண்டால், அவை சரியாகிவிடும். ஒரு சிலருக்கு மாதவிலக்கு காலமும், அளவும் நீடித்திருக்கலாம். மேலும் சிலருக்கு அது மிகுந்த வலியும் துன்பமும் நிறைந்ததாய் இருக்கும். இதனை வலிமிக்க மாதவிடாய் என்பர். சிலருக்கு வலிமிக்க மாதவிடாய் காணப்படுவதற்கு நரம்பு வலியும், சில சமயங்களில் வலிப்பும் சேர்ந்து காணப்படும். மேலும் ஒரு சிலருக்கு மாதவிடாய் தடைகள் நிறைந்து வலிமிக்க மாதவிடாயாகத் தோன்றும்.
இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும். ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.
பொண்ணுங்களுக்கு கருப்பைக் கோளாறு இருந்தா அதை சரி செய்றதுக்கு ஈஸியான வழி இருக்கு. அசோகா மரத்து பட்டை, மாதுளம்வேர் பட்டை, மாதுளம் பழ ஓடு சம அளவு எடுத்து நல்லா காய வச்சி இடிச்சி வச்சிக்கோங்க. இதை ஒரு நாளைக்கு ரெண்டு வேளை வீதமா ரெண்டு சிட்டிகை வாயில போட்டு வெந்நீர் குடிக்கணும். இதை தொண்ணூறு நாள் குடிச்சிட்டு வந்தா மலட்டுத்தன்மை போய் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுபோக நெல்லிக்காய் சாறுல ரோஜாப்பூவை அரைச்சி அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தா பொண்ணுங்களோட பிரச்சினை நீங்கி தாய்மைப்பேறு கிடைக்கும்.