Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் உடலமைப்பும் அவற்றின் குறைகளும்:

பெண்களின் உடலமைப்பும் அவற்றின் குறைகளும்:

21

இயற்கையாகவே இறைவன் பெண்களுக்கு மிக மென்மையாக உடலமைப்பை ஈந்திருக்கிறார். பெண்களுக்கு
ஏற்படக்கூடிய பருவமாறுதலுக்கு இம்மென்மையான உடலமைப்பு மிக அவசியமாகிறது.
எவ்வாறு எனில் அவர்கள் பருவமடைதல் போன்ற நிலைகளில் மிக
உதவிகரமாயிருக்கிறது.

அடுத்த மென்மையான இந்த உடலமைப்பு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றதோ
அதேபோன்று குறைகளும் உள்ளன. பெண்கள் பூப்படையும் காலத்தில் உடலில் அநேக
மாறுதல்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தியாகத்தைப்
பெண்களே ஏற்றுக் கொள்ளுவதால் அவர்களுடைய
உடலமைப்பில் தனிப்பட்ட வேறுபாடுகளும், உபாதைகளும் (மாதவிடாய்க்
கோளாறுகளும், கருச்சிதைவுகளும், பிரசவமும்) ஏற்படுகின்றன..

அடுத்து, உடல் நீண்டு வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. கால்கள்
குறுகுவதையும் தொடைகளின் தசை அதிகமாவதும் மார்பகங்கள் வளர்ச்சியடைவதும்,
சுவாசம் கொள்ளளவு சற்று அதிகமாவதையும் நன்றாக காணலாம். மேலும் எலும்புகள்
மிகவும் லேசாகவும் சதைகளின் எடைக் குறைவாகவும் காணப்படுவதால் அவர்களின்
புவிஈர்ப்புத் தானம் மிகவும் குறைவுறுகிறது. இவை யாவும் குறைகளே. இதோடு
மட்டுமல்லாமல் அவர்கள் தாய்மையடைந்து இருக்கும் நிலையில் இரு
உயிர்களுக்காக அவர்கள் சுவாசம் செய்யவேண்டும். தாயின் சுவாச நிலையில்
ஏதேனும் குறைபாடு ஏற்படுமாயின் அது வளரும் சிசுவையும் பாதிக்கிறது..

எனவே, இந்நிலையில் இயல்பாகவே அவர்களுக்கு மனோநிலை பாதிக்கப்பட்டு
படபடப்பு, நிதானம், பொறுமை, உணர்வு ஆகிய யாவும் பாதிக்கப்படுகின்றன.
மேற்கண்ட குறைகளை எல்லாம் தேகப்பயிற்சி மூலமாகத் தீர்க்க முடியாது. ஆனால்
யோகப் பயிற்சி மூலம்உடலுக்கு அதிக இரத்த ஓட்டத்தையும் அதிகாமாகக்கச்
செய்கிறது. மகப்பேறு மிகச் சுலபமாக வேதனையின்றி அடைய வழி செய்கிறது. .