சமீபத்தில் அமெரிக்க நிறுவனம் எடுத்த சர்வே ஒன்றில் ஸ்மார்ட்போன்களை பெட்ரூமில் பயன்படுத்துவதால் பல பிரச்சனைகள் உண்டாகும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்த பத்திரிகை ஒன்று கடந்த சில நாட்களாக ஸ்மார்ட்போன்களை பெட்ரூமில் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த ஒரு சர்வே எடுத்தது. இந்த சர்வே முடிவு நேற்று வெளியானது. இந்த முடிவில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 53%பேர் பெட்ரூமில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதாகவும், அதில் பாதி பேர் பயன்படுத்திய ஸ்மார்ட்போன்களை ஆப் செய்யாமலேயே தூங்கிவிடுவதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.
ஒருசிலர் ஸ்மார்ட்போனில் வீடியோ சாட்டிங் செய்துகொண்டே அந்த சாட்டிங்கை ஆப் செய்யாமல் தூங்கிவிடுவதால் மறுமுனையில் இருப்பவர்கள் பெட்ரூமில் நடக்கும் சம்பவங்களை அவர்களுக்கே தெரியாமல் பார்க்கும் விபரீதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெட்ரூமில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதால் பெரும்பாலானோர்களுக்கு கண்களில் பார்வை பிரச்சனை ஏற்படுவதாகவும் இந்த சர்வே முடிவு தெரிவிக்கின்றது.