பெங்களூருவில் உள்ள ஒரு உணவு விடுதி பாரில் இசைக்கு தகுந்தவாறு கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்து நடனம் ஆட வைத்த 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து பெங்களூர் போலீசார் கூறுகையில், ”நகரின் மையப்பகுதியில் பீல்டு மார்ஷல் கே.எம் கரியப்பா சாலையில் உள்ளது ஒரு உணவு விடுதி. இதில் பார் உள்ளது. இந்த பாரில் இசைக்கு ஏற்ப நடனம் ஆடும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஆடுவதும், ஆவர்கள் மீது பணத்தை வீசுவதும் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நாங்கள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டோம்.
அப்போது, அந்த பாரில் பெண்கள் மீது வீசப்பட்டு, தரையில் கிடந்த ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பாரில் நடனம் ஆடிக் கொண்டு இருந்த நேபாளம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 77 பெண்கள் மீட்கப்பட்டனர். வறுமையில் இருக்கும் பெண்களை வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி அழைத்து வந்து பார்களில் இதுபோன்ற நடனம் ஆட வைக்கின்றனர்.
இந்த பாருக்கு சொந்தமான கங்காஷெட்டி இவரது கூட்டாளிகள் ஓம்பிரகாஷ் யாதவ், வனிதா, சாந்தி ஸ்வரூப், தனேந்திரா, சையத் சமீர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்” என்றனர்.
இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்