Home சூடான செய்திகள் புது மனைவியிடம் கேட்க வேண்டிய 3 கேள்விகள்!

புது மனைவியிடம் கேட்க வேண்டிய 3 கேள்விகள்!

21

wins2-500x500புதுமண தம்பதிகள் திருமணமானவுடன், உனக்கு என்ன பிடிக்கும், எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துக்கொள்வதற்கு முன்னர், இருவீட்டார் உறவுகளை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன்னர் எதிர்கால சேமிப்பு, செலவு, பொருளாதாரம் குறித்து கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
திருமணத்திற்கு பிறகு தேனிலவில் துவங்கி, குழந்தைக்கு பால்சோறு ஊட்டுவது வரைக்கும் ஏகப்பட்ட அவசர செலவுகள் வரும். பிறகு, பள்ளயில் சேர்ப்பதற்கு என்றே நீங்கள் தனியாக சம்பாதிக்க வேண்டும். அது வேறு தனி கதை.
எனவே, திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியிடம் நீங்கள் இந்த மூன்று கேள்விகளை கேட்டு தெளிவாகிக் கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்…
கேள்வி ஒன்று!
உனக்கான தனி பொருளாதார செலவுகள் இருக்கிறதா? அவை என்ன? இது தான் நீங்கள் மிக முக்கியமாக கேட்க வேண்டிய கேள்வி. ஏனெனில், இது தான் நீங்கள் சேமிக்க நினைக்கும் பணத்திலும், வேறு செலவுகளுக்கு ஒதுக்கும் பணத்திலும் வெட்டு விழுக வைக்கும்.
கேள்வி ஒன்று!
பால், கேஸ், சமையல் பொருட்கள், போன்றவற்றை தவிர பெண்களுக்கு என நிறைய செலவுகள் இருக்கிறது. பியூட்டி பார்லர் போவது, அக்கம்பக்கத்து வீட்டு பெண்களுடன் சின்ன சின்ன ஷாப்பிங் செய்வது, வீட்டிற்கான அவசர தேவைகள். எனவே, இதற்கு மாதாமாதம் எவ்வளவு தேவைப்படும் என முன்பே கேட்டு வைத்துக் கொள்வது அவசியம்.
கேள்வி ஒன்று!
ஏனெனில், புதியதாக திருமணம் ஆன ஆண்களுக்கு இது பற்றி எதுவும் பெரிதாக தெரியாது. மேலும், அவர்களே தங்களையும் மறந்து சில வீண் செலவுகள் செய்வார்கள். சேமிக்க நினைக்கும் ஆண், முதலில் இந்த கேள்விக்கு பதில் அறிந்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி இரண்டு!
பொருளாதார திட்டங்கள்! ஆம், லைப் இன்சூரன்ஸ், ஆர்.டி, எப்.டி போன்ற சேமிப்புகள் செய்வது, லோன் வாங்கி வீடு, வாகனம் வாங்குவது, தங்க சீட்டு போன்று ஏதாவது திட்டங்கள் இருந்தால் செயல்படுத்தலாம். திருமணத்திற்கு பிறகு சேமிப்பு மிகவும் அவசியமானது.
கேள்வி இரண்டு!
சிலர் திருமணதிற்கு முன்பே சில திட்டங்கள் போட்டு வைத்திருப்பார்கள் அல்லது ஏற்கனவே நீங்கள் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருக்கலாம். அதையே பின்பற்றலாமா அல்ல நிறைய பயனளிக்கும் வேறு திட்டங்களில் பதிந்து வைத்துக் கொள்ளலாமா என யோசியுங்கள்.
கேள்வி மூன்று!
எந்தெந்த செலவுகளை குறைத்துக் கொள்ளலாம்? எந்தெந்த செலவு வீணாக செய்கிறோம், எதை தவிர்க்கலாம், எதை கூட்டலாம் என்பதை ஒன்றாக உட்கார்ந்து கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
கேள்வி மூன்று!
அவசர தேவைக்கு எவ்வளவு சேமிக்க வேண்டும். பிற்காலத்தில் பிரசவ கால செலவு, குழந்தை பிறந்த பிறகான செலவு என அனைத்திற்கும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் தான் கையை கடிக்காமல், கடன் வாங்காமல், இல்லறத்தை நல்லறமாக நடத்த முடியும்.