Home சமையல் குறிப்புகள் பீட்ரூட் தயிர் பச்சடி

பீட்ரூட் தயிர் பச்சடி

24

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 2

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் – ஒன்று

தயிர் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு – அரை தேக்கரண்டி

எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை :

• பீட்ரூட் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

• பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதனுடன் துருவிய பீட்ரூட், இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

• வதங்கியதும் உப்புச் சேர்த்து வதக்கி, வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

• ஆறியதும் அதனுடன் தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.

• சத்தான, சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் தயிர் பச்சடி தயார்.