Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பிரா அணியும் விஷயங்களில் பெண்கள் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

பிரா அணியும் விஷயங்களில் பெண்கள் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

21

பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டக்கூடியது. அந்த பிராக்கள் எப்போது தங்களுடைய பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகையும் பொலிவிழக்கச் செய்யும்.

பிராக்களைப் பார்த்துப் பார்த்து அழகாக வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது.

சிலர் தங்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாடை இருப்பின் அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட மனது வராது. ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

பிராக்கள் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா? அவை வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அதில் அடங்கியிருக்கிறது.

நாம் அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போல, நிச்சயம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்கள் பழைய பிராக்களைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய பிராக்களை வாங்குங்கள்.

மெட்டல் ஹூக் உள்ள பிராக்களை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அது சருமத்தில் உராய்ந்து அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.

ஃபிட்டான பிராக்களை அணிவது மிக முக்கியம். அது உங்கள் வடிவழகை கூட்டும். தளர்வான, ஃபிட் இல்லாத பிராக்கள் உங்கள் உடல் வடிவைக் கெடுப்பதுடன் மார்புகளை மிக அதிகமாகத் தளர்வாக்கிவிடும்.

நன்கு கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், நிச்சயம் உங்களின் பிராக்களின் கப் சைஸ் ஒரு வருடத்துக்கு ஆறு முறையாவது மாற்றமடையும். அதனால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மார்பளவை அளவெடுத்து, அதற்கேற்றாற் போல் பிராக்களை அணிந்திடுங்கள்.

அளவுக்கு அதிகமாக இறுக்கமுடைய பிராக்களை அணிவதும் தவறு தான். அதனால் வியர்வை வெளியேற முடியாமல் போகும். அது பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.

பிராக்களின் தோள் பட்டையில் உள்ள ஸ்ட்ரிப் லேசாக தளர்ந்தாலும் உங்களுடைய அளவில் மாற்றம் உண்டாகும். மார்பகம் தளர்ந்து போகும். அதனால் ஸ்ட்ரிப் தளர ஆரம்பிப்பது உங்களுடைய பிராக்களை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகளில் ஒன்று.