குழந்தை பெற்ற பின்பு எல்லா பெண்களுக்கும் ஏற்படக் கூடிய மிகப் பெரிய பிரச்சனை தழும்புகள் தான்! இந்த தழும்புகளை முற்றிலும் வராமல் தடுக்க முடியாது. ஆனால் நிச்சயம் அதை குறைக்க முடியும்? அது போல் முதுகு மற்றும் கால் வலி, வயிறு விரிதல் என்றுபல பிரச்சனைகளும் ஏற்படும்.
குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமந்து அது வெளிவரும் பொழுது வயிற்று பகுதிகளின் தசைகள் மற்றும் இடுப்பு எலும்புகள் விரிந்து பிரசவம் சுலபமாக இருக்கும்? இதனால் மேல் சொன்ன பாதிப்புகள் வருவது இயல்பு தான்.
அதற்கு குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே, அதாவது 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயிலை அடி வயிறு, கால், தொடைகளில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரை ஊற்றி குளிக்கவும். (மருத்துவரின் ஆலோசனையின் படி இதை செய்ய வேண்டும்.)
இதோடுகுழந்தை பிறந்த பின்பும் அப்படியே முன்று மாதம் தொடர்ந்து செய்யுங்கள்.தண்ணீர் ஊற்றும் பொழுது கட்டாயம் நல்ல சூடாக இருப்பது நல்லது. தினமும் அடிவயிறை குறைக்க கூடிய உடல் பயிற்சியினை தவறாமல் செய்யவும்.
இடுப்புக்குபெல்ட் கட்டாயம் போடவும். இதன் முலம் வயிற்று பகுதி சுருங்கி பழைய தோற்றம் கிடைக்கும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதால் உங்கள் ஆரோக்கியம் அதிகமாகும்.