Home ஜல்சா பாலியல் தொல்லையால் பழுதடைந்து போன ‘சமந்தா’!

பாலியல் தொல்லையால் பழுதடைந்து போன ‘சமந்தா’!

28

வரவர அதிநவீன நவநாகரீக சமூதாயம் என பறைசாற்றிக் கொண்டிருக்கும் நமது கலியுகத்தில் அறிவியலையும், விஞ்ஞானத்தையும் விட இச்சை எண்ணம் தான் அதிகரித்து வருகிறது. பாலியல் தொழிலை நிறுத்த, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்களை காக்க உதவும் கருவி என உருவாக்கப்பட்டு வரும் செக்ஸ் ரோபாட்டுகள், இதன் ஒரு வெளிபடாகவே காணப்படுகிறது. ஆனால், இந்த செக்ஸ் ரோபாட்டை கூட விட்டு வைக்க இயலாத இச்சை வெறியர்களாக மனிதர்கள் மாறியிருக்கிறார்கள் என்பது சமீபத்தில் நடந்த ஒரு ரோபாட் கண்காட்சியில் தெரியவந்துள்ளது. கண்காட்சியின் ஒரு பகுதியில் செக்ஸ் ரோபாட் வைக்கப்பட்டிருந்தது. மனிதர்கள் அதன் மீது ஏறி சீண்டியதன் விளைவாக அது சேதமடைந்துவிட்டது என அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.

சமந்தா! சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்ட சமந்தா எனும் பெண் ரோபாட் உருவாக்கப்பட்டது. இந்த ரோபாட்டை அதன் உரிமையாளர் கண்காட்சி ஒன்றில் காட்சிக்காக வைத்திருந்தார். ஆனால், கண்காட்சிக்கு வந்த நபர்கள் அந்த ரோபாட்டுக்கு கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக அந்த சமந்தா ரோபாட் சேதமடைந்துள்ளது.

ஆர்ட்ஸ் எலக்ட்ரோனிகா விழா! ஆஸ்திரியாவின் லின்ஸ் எனும் பகுதியில் நடந்த ஆர்ட்ஸ் எலக்ட்ரோனிகா விழாவில் 2.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமந்தா எனும் பாலியல் ரோபாட் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இதில் பங்கெடுத்து கொண்ட ஆண்கள் பலர் சமந்தாவை கடுமையாக தீண்டியதன் காரணத்தால் அதன் இரண்டு விரல்கள் உடைந்துப் போனது.

மோசம்! பல ஆண்கள் சமந்தா ரோபாட்டின் மார்பு, கை, கால்கள் மீது ஏறி தங்கள் இச்சை வெறியை வெளிப்படுத்தியதன் காரணத்தால் அதன் விரல்கள் உடைந்து, ரோபாட் வலுவாக சேதமடைந்து போயுள்ளது என அதன் உரிமையாளரான பார்சிலோனியா, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த செர்ஜியா சாண்டோஸ் கூறியுள்ளார்.

காட்டுமிராண்டிகள்! இந்த சமந்தா எனும் பாலியல் ரோபாட் சில இடங்களில் தீண்டினால் முணுகும். இதை எப்படி பயன்படுத்துவது என அறியாத மக்கள் அதை தவறாக பயன்படுத்தியதே இந்த சேதத்திற்கு காரணம் என உரிமையாளர் கூறியுள்ளார்.

எதிர்ப்பு! இந்த சம்பவத்தை கண்டித்தும், செக்ஸ் ரோபாட்டுகளை ஆதரித்தும் ஒருசிலர் கருத்துக்கள் வெளியிட்டு வந்தாலும், செக்ஸ் ரோபாட்டின் உருவாக்கமே தவறு, இது மனித இனத்திற்கு தேவையற்றது. உறவுகளில் மேலும் வலுவின்மையை உண்டாக்கும் வகையில் இது அமையும் என மற்றொரு பகுதியினர் இவ்வகை செக்ஸ் ரோபாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.