Home பாலியல் பாலியல் உணர்வைத் தூண்டும் ஹார்மோன் உடலில் குறைவதற்கான‌ காரணமும், அதை அதிகரிக்கும் வழிகளும்!

பாலியல் உணர்வைத் தூண்டும் ஹார்மோன் உடலில் குறைவதற்கான‌ காரணமும், அதை அதிகரிக்கும் வழிகளும்!

11

டெஸ்டோஸ்டிரோன் என்பது பெண் கள் மற்றும் ஆண்களின் உடம்பில் சுரக்கும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோ னாகும். செக்ஸ் உணர்வை தூண்டுவ து இந்த ஹார்மோன்தான். பெண்க ளை காட்டிலும் இது ஆண்களுக்கு தான் அதிகமாக சுரக்கிறது. அத்தகைய உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெ ரோன் அளவு குறைய ஆரம்பித்தால், அது உடல் வளர்ச்சியில் பாதிப் பை ஏற்படுத்தும்.
அதிலும் முக்கியமாக ஆண்மை குறையத் தொடங்கி விடும். ஆகவே இத்தகைய ஹார்மோனின் அளவை சீராக பராமரிக்க வேண்டும். மேலு ம் இந்த ஹார்மோன்களின் அளவை அதிகரிப்பதற்கு பல செயல்கள் உள் ளன. குறிப்பாக அதனை உணவுகள் மூலம் அதிகரிக்கலாம்.
ஆனால் பலருக்கு இந்த ஹார்மோ ன்கள் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது அந்த ஹார்மோ ன்களை சரியான அளவில் பராமரி க்க, கீழ்கூறியவைகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்கவும்
அதிக எடையுடன் இருந்தால், பல எதிர் மறையான விளைவுகளை சந்தி க்க நேரிடும். மேலும் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால், அது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரி க்க விடாமல் தடுக்கும். எனவே டெஸ் டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க, உடல் எடையை குறை க்கும் முயற் சியில் இறங்க வேண்டும்.
கனிமங்களை உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளுதல்
டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த கனிமங்கள் நிறைந்துள் ள உணவுகளை உட்கொள்ள வேண்டு ம். இது ஆண்களின் உடம்பில் டெஸ் டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவி புரியும். டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இருக்கும்போது, இந்த கனி மங்கள் நிறைந்த உணவுகளை அதிக மாக உட்கொண்டால், இந்த பிரச்சனை பெருமளவில் குறையும். குறிப் பாக இந்த சத்துக்கள் கடல் சிப்பி, நட்ஸ், பூசணிக்காய் விதைகளில் அதி கம் இருக்கும்.
மன அழுத்தம்
தொழில் அல்லது குடும்ப வாழ்க்கை யில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்ப டும் மன அழுத்தம், உடல் ஆரோக்கிய த்தை பல வழிகளில் பாதிக்கு ம். மன அழுத்தம் அதீத அளவில் இருக்கும் போது, உடலில் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் அதிக மாக சுரக்கும். இந்த ஹார்மோன்கள்உடலில் உள்ள டெஸ்டோஸ்டி ரோன் உற்பத்தியை தடுக்கும். அதனால் தியானம்போன்ற எளிய முறை களை கொ ண்டு, மன அழுத்த த்தை நீக்கிட வேண்டும்.
சர்க்கரை உண்ணுதல்
உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால், இன்சுலின் அளவு அதிகரிக்கும். அதிலும் உபயோகிக்கும் சர்க்கரை அளவை பொறு த்து, உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவும் தானாக குறையும். அதனால் சர்க்கரை உட்கொள்ளுதலில் கட்டுப்பாடு இருப்பது அவசிய மாகும். இது முக்கியமாக ஹார்மோன் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவு
நற்பதமான, சத்துள்ள ஆரோக்கியமான உணவுகள் பல உடல் பிரச்ச னைகளை தீர் த்து வைக்கும். பச்சை காய்கறிகள், பழங் கள், உலர் பழங்க ள் போன்றவைகளை சீரான முறையில் சாப்பிட வேண்டும். மேலும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவையும் உண்ண வேண்டும்.
ஓய்வு
தேவையான அளவு ஓய்வும், தூக்கமும் உடலுக்கு மிகவும் அவசியம். இது உடலுக்கு தேவையான வளர்ச் சி ஹார்மோன் உற்பத்திக்கு பெரிதும் துணையாக இருக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணி நேர ம் தூக்கம் அவசியம் என்று வல்லுனர்கள் கூறுகின் றனர். தூக்கத்தில் தான் 70% அள விலான டெஸ்டோஸ்டிரோன் உடலில் உற்பத்தியாகிறது.
ஈடுபடுதல்
தொடர்ச்சியாக 45-75 நிமிடங்களுக்கு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, அதுஉடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் வளர்ச்சியை குறைக் கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால் சரியா ன முறையில் திட்டமிட்டு, அளவான உடற் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.
மதுபானம் பருகுவதில் கவனம் தேவை
கட்டுப்பாடு இல்லாமல் மதுபானம் பருகுவதால், உடலில் டெஸ்டோ ஸ்டிரோன் அளவு குறைய ஆரம்பிக்கு ம். அதிலும் தொடர்ச்சியாக மது பானம் பருகினால், உடலில் உள்ள டெஸ்டோ ஸ்டிரோன் அளவு 50 சத வீதம் வரை குறையத் தொடங்கும். எனவே இயற் கையான வழிமுறைகளால் தேவையா ன அளவு டெஸ்டோஸ்டிரோனை உட லில் பராமரித்தால், தேவையில்லாமல் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு ஓடத் தேவையில்லை.