தேவையான பொருட்கள் : பார்லி – 1 கப் (மிக்சியில் உடைத்து கொள்ளவும்) பெரிய வெங்காயம் – 1
கேரட் – 1
ப.மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
தண்ணீர் – 3 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
• கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• வெங்காயம், ப.மிளகாய். இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி மற்றும் உடைத்த பார்லியை
இட்டு நன்கு வதக்கி உப்பு கலந்து 3 கப் நீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
• பார்லி வேக சிறிது நேரம் எடுக்கும். நன்கு வெந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்
• குக்கரில் அனைத்து பொருட்களையும் போட்டு மூன்று விசில் வைத்து வேக வைத்தும் எடுக்கலாம்.