Home பெண்கள் அழகு குறிப்பு பாதங்களில் பனி வெடிப்பா? இதோ 15 நிமிடங்களில் போயே போச்சு …

பாதங்களில் பனி வெடிப்பா? இதோ 15 நிமிடங்களில் போயே போச்சு …

17

captureபாதவெடிப்பு தீராத கால்வலியை உண்டாக்கும். அதிலும் பனிக்காலத்தில் பாதங்களும் சருமமும் வெடித்து உங்களை பாடாய் படுத்துகிறதா? இனி கவலையை விடுங்க… இத ட்ரை பண்ணுங்க.வெறும் 15 நிமிடங்களில் பாத வெடிப்பை விரட்டியடிக்கலாம்.

பாத வெடிப்பு ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலருக்கு பருவ மாற்றங்களால் உண்டாகும். சிலருக்கு சோப்பு ஆகியவற்றால் ஏற்படும் அலர்ஜியால் வெடிப்பு உண்டாகும். பாத வெடிப்புகளுக்கு சிலர் என்னென்னவோ மருந்துகள் எல்லாம் வாங்கி உபயோகப்படுத்தி இருப்பார்கள்.

ஆனால் நம்முடைய வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் நம்முடைய பாத வெடிப்புகளைக் குணப்படுத்தும் என்பது தெரியாமலேயே இருந்துவிடுகிறோம்.

வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவினால் விரைவில் குணமடையும்.

பயத்த மாவு, வேப்பிலை, எலுமிச்சை சாறு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைக் கலந்து பாத வெடிப்புகளில் தடவி வந்தாலும் வெடிப்புகள் மறையும்.

இரவில் கை பொறுக்கும் அளவுக்கு சூடாக வெந்நீர் வைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொண்டு, அதில் பாதங்களை அரை மணிநேரம் நன்கு ஊற வைத்து பிரஷ்ஷால் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.

கடுகு எண்ணெயை கை மற்றும் கால் பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வெடிப்புகள் மறைந்து மிருதுவாகும்.

வெந்தயக்கீரையை அரைத்து கை மற்றும் கால்களில் தேய்த்து 15 நிமிடங்கள் வரை நன்கு ஊறவிட்டுப் பின் தேய்த்து கழுவினால் வெடிப்புகள் மறைந்து போகும். சருமமும் பளிச்சென்று ஆகும்.

அதேபோல் மருதாணிப் பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து பாதங்களில் தேய்த்து வந்தாலும் வெடிப்புகள் விரைவில் மறையும்.