Home சமையல் குறிப்புகள் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

24

58a65807-ea34-450c-a91f-249adfb4d85d_S_secvpfதேவையான பொருட்கள்

பிஞ்சு பாகற்காய் – 200 கிராம்
பாசிப்பருப்பு – 100 கிராம்
இலவங்க இலை – 2
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
ப.மிளகாய் – 1
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தண்ணீர் – அரை லிட்டர்
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி

செய்முறை :

• கொத்தமல்லி, பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• பாசிப்பருப்பை வேகவைத்து நீரில் கரைத்து கொள்ளவும்.

• ப.மிளகாயை நீளவாக்கில் கீறிகொள்ளவும்.

• பாகற்காயை வேகவைத்து கொள்ளவும்.

• வாணலியில் நெய் ஊற்றி சீரகம், இலவங்க இலையை சேர்த்து தாளித்து பாகற்காய், மிளகுதூள், இஞ்சி விழுது, ப.மிளகாய் இட்டு நன்கு வதக்கி கரைத்து வைத்துள்ள பருப்பு கரைசலை கலந்து உப்பு இட்டு நன்கு கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

• இதை பருகினால் ஜீரண கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். கல்லீரல் நோயாளிகளுக்கும் இது ஏற்ற உணவு.