Home சூடான செய்திகள் படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது

படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது

29

palayamkottai_movie_stills_photos_10-300x168நாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாசனைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவதுண்டு. இது நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலிகை.
தெற்காசிய நாட்டவர்களே இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.இது பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு.
ஆண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தமது இயல்பான பாலியல் சக்தியை குறைந்த பட்சம் இன்னும் கால்வாசியால் அதிகரித்துக் கொள்ள முடியும். 25 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட அறுபது ஆரோக்கியமான நபர்கள் மத்தியில் இது சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து தினசரி இரு தடவை வெந்தயம் வழங்கப்பட்டது.மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஆறு வாரம் வரையான காலப்பகுதியில் இவர்களின் பாலியல் உணர்வுகள் பரிசோதிக்கப்பட்டன.
அப்போது இவர்களில் 28 வீதமானவர்களிடையே 16.1வீதம் முதல் 20.6 வீதம்வரை வீரிய உணர்வு மேலோங்கி இருந்தது அவதானிக்கப்பட்டது.இதே காலப் பகுதியில் இன்னொரு பிரிவினருக்கு பாலியல் சம்பந்தமான மாத்திரைகளும் வழங்கி அவர்களும் அவதானிக்க ப்பட்டனர். அனால் அவர்களில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.
வெந்தய விதை மற்றும் கீரை ஆகிய இரண்டுமே மிகச் சிறந்தவை.இந்திய உணவுகளில் இவை பெருமளவு பளன்படுத்தப்படுகின்றன.வெந்தயத்தில் saponins எனப்படும் மூலப் பொருள் கலந்துள்ளது. இது ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட பாலியல் ஹோர்மோன்களைப் பலப்படுத்தக்கூடியது.
படுக்கை அறையை சூடாக்க வெந்தயம் பெரிதும் கை கொடுக்கும் என்று இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர மருத்துவ பீட ஆய்வாளர்களே இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
பாலியல் குறைபாடு உள்ளவர்களுக்கு வெந்தயம் மூலம் தாங்கள் அளித்த சிகிச்சை சிறந்த பெறுபேறைத் தந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்