தேவையானவை:
கடலைப்பருப்பு – ஒரு கப்,
துவரம்பருப்பு – 4 டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் – ஒரு கப்,
நெய் – 5 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
முந்திரி – 10.
செய்முறை:
பருப்பு வகைகளை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து… ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, நீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தி காயவிட்டு, மிக்ஸியில் போட்டு ரவை போல பொடிக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீருடன் வெல்லத்தை சேர்த்து, கரைய விட்டு வடிகட்டவும். இந்த வெல்லக் கரைசலுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு தக்காளி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் பருப்பு ரவையை சேர்த்து கரண்டி காம்பால் கிளறவும்.நெய்யில் வறுத்த முந்திரியை இந்த பருப்பு கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
நெல்லையில் தீபாவளி சமயத்தில் இதைச் செய்வார்கள்.