வாழ்க்கையின் அடிப்படையான விடயம் எதுவென்றால் அது ரொமான்ஸ்தான்.
ஆண்- பெண் இருபாலருக்கும் ரொமான்ஸ் வருவதற்கு காதல் என்ற ஒன்றுதான் காரணம்.
அப்படியான இந்த காதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு கோடிக்கணக்கான பதில்கள் இந்த சமுதாயத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
காதல் வந்துவிட்டால் எவ்வித உணர்வுகள் ஏற்படும் என்பதை அறிவியல் ரீதியாகவும், இலக்கியப்பூர்வமாகவும் என்று பார்ப்போம்,
அறிவியல் ரீதியான உணர்வுகள்
முதலில் சொல்லும் ஒரு கருத்து, “இது ஒரு இனக்கவர்ச்சியே”, ஆண் பெண் இருபாலரின் இனப்பெருக்கத்திற்காக தூண்டப்படும் ஒருவித உணர்வு ஆகும் என்று கூறுவார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது காதல் தோன்றுவதற்கு முன்னால் அட்ரினலின் நரம்பு வழியாக ரசாயனம் சுரக்கிறது. இதனைத்தான் ஒரு வித உணர்வு என்கிறார்கள்.
மேலும், பினைல்தைலமைன் என்கிற ரசாயனம் நரம்பு செல்களுக்கிடையே ரொமாண்டிக்கான செய்திகளைப் பரப்புகிறது.
இதனுடன் டோபோமைன்(Dobamain) மற்றும் நோர்பைன்ஃபரைன்(Norpainhparain) போன்ற உற்சாக ரசாயனங்களும் சேர்ந்துகொள்ள, அட்ரினலின் சுரந்து, இதயம் ஏகாந்தமாக உணர்ந்து படபடவென்று அடித்துக்கொள்கிறது.
ஆண் – பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து நீடிக்க ஆக்ஸிடோசின்(Oxidocin) என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது.
இலக்கியப்பூர்வமான உணர்வுகள்
காதலை இலக்கியப்பூர்வமாக வர்ணிப்பதற்கு வார்தைகள் வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் காதல்வயப்பட்டுவிட்டீர்கள் என்றால் கனவுகள் சுகமாகும், நீங்கள் நிஜத்தில் சந்தோஷமாக வாழ்வதைவிட, கனவில் சந்தோஷமாக இருப்பீர்கள்.
இந்த உலகில் நீங்கள் பிறந்ததே, காதல் என்ற மூன்று எழுத்து மந்திரத்தின் அர்த்ததத்தை அறிந்துகொள்ளத்தானே என்ற உணர்வு ஏற்படும், வாழ்வில் பிரச்சனைகளையும், சாவால்களையும் சந்திக்கக்கூடிய தைரியம் பிறக்கும்.
சுகமான தனிமைகள், ஆனந்தமாய் கரையும் கண்ணீர் போன்றவற்றை உணர்வீர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆகவே காதல் செய்யுங்கள், வாழ்வில் சந்தோஷங்களை அனுபவியுங்கள்.