Home பெண்கள் பெண்குறி நீங்களே தயார் செய்யக்கூடிய வழவழப்புப் பொருள்கள்

நீங்களே தயார் செய்யக்கூடிய வழவழப்புப் பொருள்கள்

68

உடலுறவின்போது இனப்பெருக்க உறுப்புகளில் உராய்வு, வறட்சி, தேய்மானம் போன்றவற்றைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களே வழவழப்புப் பொருள்கள் எனப்படுகின்றன. வீட்டிலுள்ள எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம், விற்பனைக்குக் கிடைக்கும் தயாரிப்புகளையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

இவை உடலுறவு அனுபவத்தை மேம்படுத்துகின்றன மற்றும் பெண்ணின் பாலுறவு திருப்தியை அதிகரிக்கின்றன என்று கூறப்படுகிறது. 18-68 வயதுப் பிரிவைச் சார்ந்த 2,451 பெண்களிடையே 2013இல் நடத்தப்பட்ட ஆய்வில், மொத்தத்தில் உடலுறவின்போது வழவழப்பு இருப்பதை விரும்புகின்றனர் என்றும், அதிக ஈரம் இருப்பது அவர்களுக்கு மிகவும் சௌகரியமாக இருப்பதாகவும் கண்டறிந்தது, பத்தில் ஒன்பது பெண்களுக்கு வழவழப்புப் பொருள் பயன்படுத்தினால் உடலுறவு மிகவும் எளிதாகவும், அதிக இன்பமளிப்பதாகவும் இருப்பதாக உணர்கின்றனர் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

உடலுறவின்போது பயன்படுத்துவதற்கு, நீங்களே வழவழப்புப் பொருளைத் தயார் செய்து பயன்படுத்தலாம் அல்லது விற்பனைக்குக் கிடைக்கும் தயாரிப்புகளையும் பயன்படுத்தலாம்.

A) நீங்களே தயார் செய்யக்கூடிய வழவழப்புப் பொருள்கள் (Do it yourself personal lubricants)

சிலர் உடலுறவின்போது வழவழப்புக்காக உமிழ்நீரை உமிழ்ந்து பயன்படுத்துவார்கள். சிலர் வழவழப்புக்காக வீட்டில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்துவார்கள். வீட்டிலிருக்கும் பொருள்களில் பொதுவாக இதற்குப் பயன்படுத்தக்கூடிய சில:

தேங்காய் எண்ணெய், ஆளிவிதை எண்ணெய், பேபி ஆயில், ஆலிவ் எண்ணெய், தாவர எண்ணெய்கள் மற்றும் பிற எண்ணெய் வகைகள்
வெண்ணெய்
செயற்கை வெண்ணெய்
பெட்ரோலியம் ஜெல்லி (வாசலின்)
முட்டை வெள்ளைக்கரு
கற்றாழை ஜெல்

இவற்றை வழவழப்புக்காகப் பயன்படுத்துவதில் உள்ள சில சாதகமற்ற அம்சங்கள்:

விற்பனைக்குக் கிடைக்கும் தயாரிப்புகளை விட, குறைந்த நேரமே இவை வழவழப்பைத் தக்கவைக்கும்
அவற்றில் சில லேட்டக்ஸ் ஆணுறைகளை சேதப்படுத்தலாம் என்பதால் அவை பாதுகாப்பானவையல்ல.
இவை பெண்ணுறுப்பின் pH அளவை மாற்றலாம், இதனால் பெண்ணுறுப்பு அழற்சி உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கலாம்
இவற்றில் பல, பாக்டீரியா இல்லாத சுத்தமானவை அல்ல, ஆகவே அவை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது