Home இரகசியகேள்வி-பதில் நான் 13-14 வயதிலிருந்தே சுய இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன்..!

நான் 13-14 வயதிலிருந்தே சுய இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன்..!

71

கேள்வி: இந்தக் கேள்வியை கேட்க ரொம்ப கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும் கேட்கின்றேன். எனக்கு வயது 32 . நான் 13-14 வயதிலிருந்தே சுய இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன். அது நாள் இருந்து இன்று வரை நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். கடந்த சில வருடங்களாக ஒரு நாளைக்கு 3-5 முறை சுய இன்பம் அனுபவிப்பேன்.

அது மட்டுமல்லாமல் கடந்த 8 – 10 வருடங்களாக பாலியல் படத்திற்கு அடிமையாக இருந்தேன். ஒரு நாளும் பார்க்காமல் இருந்தது கிடையாது. முக்கியமாக இணையத்தளங்களில். அதைப் பார்த்து விட்டு பலமுறை சுய இன்பம் அனுபவிப்பேன்.

ஆனால் கடந்த பல மாதங்களாக எனக்கு இந்த சுய இன்பம் அனுபவிப்பதிலிருந்த ஈடுபாடு குறைவடைகிறது. தற்பொழுது ஒரு வாரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் வந்து விட்டது.

அத்துடன் அப்படி சுய இன்பத்தில் வெளியேறும் விந்துதிரவத்தின் அளவும் நன்றாகக் குறைந்து விட்டது. அத்துடன் இந்த பாலியல் படங்களைப் பார்க்கின்ற ஈடுபாடும் குறைந்து போய்விட்டது. அப்படி மீறி எப்போதாவது பார்த்தாலும் எனது ஆண்குறி முந்தய மாதிரி தடிப்பதில்லை. அந்தப் படங்களைப் பார்க்கும்போது எந்த உணர்வுகளும் பெரிதாக வருவதில்லை.

பெண்களைக் கண்டால் பெரிதாக எந்த உணர்ச்சிகளும் தற்போது வருவதில்லை. இத்தனைக்கும் நான் 32 வயது நிரம்பிய குடி, புகைப்பழக்கமற்ற மணமாகாத ஆண்.

இதுவரை எனக்கு எந்த வியாதிகளும் வந்ததில்லை. மன அழுத்தம் எதுவும் இல்லை.

தற்பொழுது காலை நேரத்தில் ஏற்படும் விறைப்பும் இல்லை என்றே சொல்லாலம்.

நானாக சுய இன்பம் அனுபவித்தால் தாமதமாக விறைப்பு ஏற்படுகின்றது. அது விந்து வெளியேறியவுடனேயே விறைப்பு குறைந்து விடுகின்றது.

விரைவில் திருமணமாக இருக்கும் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றேன். யாராவது பாலியல் பற்றிக் பேசினாலோ, என்னைத் தூண்டினாலோ அதில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லாமல் இருக்கின்றது.

இதற்கு நான் என்ன செய்யவேண்டும்?. எவ்வாறு நான் எனது பழைய நிலையை அடைவது. எவ்வாறு நான் சந்தோசமாக வாழ்வது?.

இதற்கு முன்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் எனது ஆணுறுப்பில் உணர்வு தூண்டல் இருந்து கொண்டே இருக்கும். தற்பொழுது எதுவுமே இல்லை. மேலும் நான் எந்தவிதமான மன அழுத்தத்திற்கும் உள்ளாகவில்லை. மிகவும் தெளிவாகவும் சந்தோசமுமாகவே எனது வாழ்க்கை உள்ளது. ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்த பாலியல் உணர்வு குறைந்து கொண்டு செல்வது கவலையளிக்கிறது.

இதற்கு என்ன காரணமாக இருக்கும்? தொடர்ந்து சுய இன்பம் அனுபவித்ததா? தொடர்ந்து போர்னோகிராபி படம் பார்த்ததா? அல்லது வேறென்ன காரணம்?

நான் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் எனது மண வாழ்வில் எவ்வாறான தாக்கத்தை உண்டுபண்னும்? இதிலிருந்து மீண்டு எனது பழைய நிலையை அடையமுடியுமா?

தயவு செய்து எனது பழைய நிலையை அடைந்து சந்தோசமாக எனது திருமண வாழ்வை தொடங்குவதற்கு வழிகாட்டுங்கள் மருத்துவர் அவர்களே.

பதில்: மிகப்பெரிய கேள்வி கேட்டுள்ளீர்கள், உங்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் நானும் எனது பதிலை கட்டுரையாகவே தருகிறேன்
சுய இன்பம் (MASTURBATION) சில தகவல்கள்.

ü சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும்.

ü நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத்துக்களைச் சொல்வார்கள்.

ü ஒரு ஆய்வில் 95 வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள்.

ü ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் எத்தனையோ?
ü திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ü சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ü ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப்பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

ü எப்போதாவது செய்யும் (தோராயமாக மாதத்திற்கு 2 – 3 முறை) சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.

ü இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.

ü சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் அதிகப்படியான சுய இன்பத்தால் கை, கால் சோர்வு, ஆண் உறுப்பு தளர்ந்து போகுதல், நினைவாற்றல் குறைபாடு, கை, கால் நடுக்கம், உடலுறவில் நாட்டமின்மை போன்றவற்றால் பாதிப்படைகின்றனர்.

ü குறிப்பாக எப்போதாவது செய்யும் சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் அதிகப்படியான சுய இன்பம் தேவையற்ற உடல் பாதிப்பையும் மன நல மாற்றத்தையும் உண்டாக்கலாம்.

ü சுய இன்பத்தால் குழந்தை பிறப்பதிலும் எந்தச் சிக்கலும் ஏற்படாது.
ü ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்திலும் உடலுறவில் வெளிவரும் விந்திலும், விந்தனுக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு.

சுய இன்பத்தில் ஈடுபடாவிட்டாலும் விந்து தானாகவே வெளியேறிவிடும். இதனால் எப்போதாவது செய்யும் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண்மை குறைகிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை

முக்கியமாக கவனிக்க
பொதுவாக சுய இன்பத்தால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது என்று கூறினாலும் நிறைய இளைஞர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் அளவிற்கு அதிகமான சுய இன்பத்தில் ஈடுபட்டு
ü மனத்தளர்ச்சி மற்றும் உடல் சோர்வு, அசதி,
ü மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்து பேச தயக்கம்,
ü பெண்களிடம் பேசும்போதே அல்லது அவர்களை பார்க்கும் போதோ கண்கள் தன்னையும் அறியாமல் பெண்களின் மார்பகத்தை பார்ப்பது, இடுப்பை பார்ப்பது போன்ற செயல்கள். இதனால் அலுவலகத்திலோ பொது இடங்களிளோ கெட்டபெயர் ஏற்படுத்திக்கொள்வது.
ü ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுவது, இதனால் வெளியில் செல்ல தயக்கம்,
ü வேலையில் ஈடுபாடின்மை,
ü திருமணம் செய்ய தயக்கம்.
ü திருமணப்பேச்சை எடுத்தாலே பயம்.
ü உடலுறவில் ஈடுபட பயம்.
ü மனைவியோ கேர்ள் பிரண்டோ தப்பாக நினைப்பாள் என்ற பயம்.
ü அழகான பெண்களை பார்த்தவுடன் சுய இன்பம் செய்ய தோன்றுவது.
ü சுய இன்பம் செய்யாவிட்டால் தூக்கம் வராமல் இருப்பது
போன்ற அறிகுறிகள் இருந்தால் உடன் உளவியல் ஆலோசகர் & சிறப்பு மருத்துவரை அனுகி தயங்காமல் ஆலோசனை பெறவும்

எனவே அதிகப்படியான சுய இன்பத்தால்
Ø கை,கால் நடுக்கம்,
Ø அசதி,
Ø சோர்வு,
Ø மனத்தளர்ச்சி,
Ø விந்து முந்துதல்,
Ø ஆணுறுப்பு எழுச்சி குறைபாடு,
Ø உடலுறவில் நாட்டமின்மை,
Ø துனைவியை திருப்தி படுத்த முடியாமை,
Ø நினைவாற்றல் குறைபாடு,
Ø எதிலும் கவனமின்மை,
Ø படபடப்பு,
Ø மற்றவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமை,
Ø திருமணத்திற்கு தயக்கம்,
Ø உறுப்பு சிறுத்தல்,
Ø ஆணுறுப்பில் வலி

போன்ற உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தை தவிர்த்து, மேற்கண்ட பிரச்சினைகளால் பாதித்திருந்தால் தயங்காமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெற்று பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்.